இலக்கியன் வெளியீட்டகம். கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
20 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 225., அளவு: 19.5×20 சமீ., ISBN: 978-955-7461-08-3.
இது தாய்லாந்தின் காடொன்றில் வசித்த யானைக் குடும்பமொன்றின் கதை. ஜோரா என்ற அறிவாளியான குடும்பத்தலைவியின் வழிகாட்டலில் இந்த யானைக் குடும்பம், மற்றைய யானைக் குடும்பங்களைவிடவும் மகிழ்ச்சியாகவும் கட்டுக்கோப்பாகவும் இருந்தது. குடும்பத்தில் ஒரு யானையான கிவின்கிஸ் மட்டும் சற்று வித்தியாசமானது. தலைவியின் பேச்சை மதிப்பதில்லை. குடும்பமாக வாழ்தல் பற்றிய அக்கறை அதனிடம் இல்லை. மொன்றி என்ற யானை கிவின்கிஸ் யானையின் நடத்தை பற்றிக் கவலைகொண்டது. ஒருநாள் பசுமையான தோப்பொன்றைக்கண்ட மொன்றியும் கிவின்கிஸ்ஸீம் அங்கு மேய்ச்சலுக்குச் செல்ல முடிவெடுத்தன. மொன்றி தமது குடும்பத்தைக் கூட்டி வருவதற்குள் கிவின்கிஸ் குடும்பத்தை மறந்து தானே முழுத் தோப்பையும் மேய்ந்துவிட்டது. கோபம் கொண்ட தலைவி, அதற்கான தண்டனையாக கிவின்கிஸ் யானையைக் குடும்பத்திலிருந்து ஒதுக்கிவைத்துவிட்டாள். தனியனாகத் திரிந்து அல்லலுற்ற கிவின்கிஸ், குடும்பமாக வாழ்தலின் முக்கியத்துவத்தை படிப்படியாக உணர்ந்து மீண்டும் குடும்பத்துடன் சேர்வதே இக் கதையாகும். இந்நூல் 109ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.