ரெஜி சிறிவர்த்தன. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2017. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
16 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 175., அளவு: 29.5×21 சமீ.
வானமண்டலத்தில் செயற்கைச் சந்திரன்களாக பூமியை வட்டமிடும் செய்மதிகள் பற்றிய அடிப்படை அறிவினை இச்சிறுவர் நூல் வழங்குகின்றது. புவியீர்ப்பு, நியூட்டனின் விதி, புவியீர்ப்புச் சக்தி ஆகியன பற்றிய அடிப்படைச் செய்திகளை சிறுவர்களுக்கு எளிய முறையில் தெரிவித்து அவர்களின் சிந்தனையைத் தூண்டிவிடுகின்றது. இச்சிறுவர் அறிவியல் நூலுக்கான ஓவியங்களை சரத் சுரசேன என்ற ஓவியர் வரைந்துள்ளார்.