ந.கலீனியா. கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2018. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை).
16 பக்கம், சித்திரங்கள்;, விலை: ரூபா 120., அளவு: 24.5×17.5 சமீ., ISBN: 978-955-1997-76-2.
இரட்டையர்களான மைக்கலும் டேவிட்டும் மழலையர் பள்ளிக்குப் போக ஆயத்தமாவது முதல் அங்கு நடந்தேறும் செயற்பாடுகள் வரை விபரமாக ஒரு குழந்தையின் பார்வையில் இந்நூல் விளக்குகின்றது. மைக்கலும் டேவிட்டும், மழலையர் பள்ளியில் முதல்நாள், பொம்மை விளையாட்டு, குழந்தைகள் வெளியே கண்ட காட்சி, இப்படி விளையாடக்கூடாது, தங்க மீன், வீடு கட்டுவோம், நான் யார்? நாங்கள் மழலையர் பள்ளிக்கு ஓடுவது ஏன்? ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் 078ஆவது இலக்கியன் வெளியீடாக வெளியிடப்பட்டுள்ளது.