நா.ஞானசம்பந்தன் (ஆசிரியர்). வட்டுக்கோட்டை: இலக்கியப் புதையல் அலுவலகம், 1வது பதிப்பு, 1960. (அச்சக விபரம் தரப்படவில்லை).
54 பக்கம், விலை: 50 சதம், அளவு: 21.5×14 சமீ.
1959 முதல் வெளிவரும் காலாண்டு இலக்கிய இதழின் ஐந்தாவது இதழ் இதுவாகும். யாழ்ப்பாணம், திருநெல்வேலி சைவ ஆசிரிய பயிற்சிக் கலாசாலை தமிழ்ப்பேராசிரியர் நா.ஞானசம்பந்தன் அவர்களை ஆசிரியராகக் கொண்ட இக்காலாண்டிதழ் சில காலம் வெளிவந்தது. இவ்விதழில் அப்பரும் திலகவதியாரும் (நா.ஞானசம்பந்தன்), தாய் உள்ளம் (சொ.சிங்காரவேலன்), நந்தர் பாடலி (மா.இராசமாணிக்கனார்), பழி எங்கே? (சீ.எம்.இராமச்சந்திரன்), வற்றாப்பளை அம்மன் விநோதம் (மு.இராமலிங்கம்), அப்பரும் அம்மையப்பரும் (கோ.சுப்பிரமணியபிள்ளை), இன்பமே எந்நாளும் (கி.வா.ஜகந்நாதன்), உடைந்த காதல்-செய்யுள் (அ.கி.பரந்தாமனார்), மறைமலையடிகள் (வே.நாகலிங்கம்), நந்திக் கலம்பகத் தோற்றம் (ஸ்ரீரம்போலா மாஸ்கரேனஸ்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன.