நா.பொன்னையன் (ஆசிரியர்). சுன்னாகம்: ஈழகேசரி வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1935. (சுன்னாகம்: திருமகள் அச்சியந்திரசாலை).
(6), 96 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21.5 சமீ.
22.06.1930 அன்று ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது. 1958 ஜூன் 6 ஆம் திகதி வரை ஈழகேசரி தொடர்ந்து வெளிவந்தது. ஈழகேசரியின் ஆண்டு மலர் வரிசையில் இதுவே முதலாவதாகும். இதில் ஈழகேசரி வாழ்த்துப்பா (க.சு.நவநீதகிருஷ்ணபாரதி), ஈழகேசரி யுவ வருஷ வாழ்த்து (ம.வே.மகாலிங்கசிவம்), புத்தாண்டு வாழ்த்து (க.சி.தங்கசாமி ஐயர்), ஈழகேசரிஆண்டு மடல் பாட்டு (நவாலியூர் க.சோமசுந்தரப் புலவர்), தமிழ் அபிமானிகள் கவனிக்க (வ.மு.இரத்தினேசுவரையர்), தமிழ்மொழி வாழ்த்து (சி.சுப்பிரமணிய பாரதியார்), ஈழநாடும் சோழநாடும் (சின்னத்தம்பிப் புலவர்), தமிழ் மொழி பேணல் (மு.வைத்தியலிங்கம்) ஆகிய செய்யுள்;களும், பரிபாடற் சிறப்பு (சி.கணேசையர்), பரிமேலழகர் (ந.மு.வெங்கடசாமி நாட்டார்), ஆங்கிலக் கல்லூரியும் செந்தமிழ்க் கல்வியும் (வெண்ணெய்க் கண்ணனார்), தமிழும் ஆரிய மொழிகளும் (சுவாமி ஞானப்பிரகாசர்), கவி கவியாகிறான் (புகழேந்தி), திருக்கேதீச்சரம் (வ.குமாரசாமிப் பிள்ளை), சேக்கிழார் கண்ட பூங்கோயில் (முதலியார் செ.இராசநாயகம்), தண்டமிழகத்துப் பண்டைய பெருமை (சிவங் கருணாலயப் பாண்டியப் புலவர்), மற்றவர்கள் (ஐசாக் தம்பையா), யாழ்ப்பாணவாசிகளின் தேகாரோக்கியம் (க.பாலசிங்கம்), கல்வி பயின்ற வாலிபரும் வேலையில்லாத் திண்டாட்டமும் (ஜெ.தியாகராஜா), இந்திய போராட்டம் (பாபு சுபாஷ் சந்திரபோஸ்), வாலிபரும் உண்மைத் தொண்டும் (கே.குமாரசுவாமி), எமது நாட்டவர்க்கோர் வேண்டுகோள் (வு.ஊ.இராசரத்தினம்), உலகோர் உய்ய அவதாரம் செய்த உத்தமத் திருநபி (எம்.எஸ்.எம்.புஹாரி), இலங்கையின் அரசியல் நிலை (க.ஜெயக்கொடி), இலங்கையரின் ஒற்றுமை (காங்கேசன்), தேச முன்னேற்றத்திற்குப் பெண் மக்கள் காரணர் (அ.சிவபாதம்), பிரபஞ்சலீலை (சத்தியநாதன்), பாண்டவ புத்திரனின் கீரிமலை யாத்திரை (த.சிவஞானம்), வயாவிளான் செபமாலைத் தாசர் சபை -தோமாஸ் ஆச்சிரமம் (த.முத்தையா) ஆகிய கட்டுரைகளும், மாலினி (சத்தியநாதன்), கமலாவின் கனவு அல்லது கதருடைக் காதல் (பொன்னழகு மைந்தன்) ஆகிய கதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 028157).