நா.பொன்னையன் (ஆசிரியர்). சுன்னாகம்: ஈழகேசரி வெளியீடு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1936. (சுன்னாகம்: திருமகள் அச்சியந்திரசாலை).
(10), 136 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 27.5×21.5 சமீ.
22.06.1930 அன்று ஈழகேசரி வார இதழின் முதல் இதழ் வெளியானது. 1958 ஜூன் 6 ஆம் திகதி வரை ஈழகேசரி தொடர்ந்து வெளிவந்தது. ஈழகேசரியின் 1936ஆவது ஆண்டு மலர் இதுவாகும். இம்மலரில் ஐந்திணை ஆராய்ச்சி (சி.கணேசையர்), நாகர் வரலாறு (செ.இராசநாயகம்), மடல் (ச.பொன்னம்பலபிள்ளை), வண்டல்கள் மேல் அமர்ந்திருப்போர் (ஐசக் தம்பையா), கவிஞனே சிறந்த ஓவியன் (கணேசதாசன்), மாமூலனார் (சிவங்.கருணாலயப் பாண்டியனார்), பண்டிதர் ஜவகர்லால் நேரு-இந்திய நாட்டின் முடிசூடா மன்னன் (கே.ஏ.), தமிழ்நாடு விழைவுறூஉந் தகைசார் மெல்லியல் (ஸ்ரீமதி வேதநாயகி அம்மையார்), ஆசிரியர் தொல்காப்பியனார் (க.முருகேசபிள்ளை), இலங்கை இந்துக்களும் அவர்கள் எதிர்காலமும் (W.பாலேந்திரா), பிரம்மஸ்ரீ செந்திநாதையர் அவர்கள் சரித்திரச் சுருக்கம் (ஆசிரியர்), அன்னிய மார்க்கமா? (Rev.S.குலேந்திரன்), சுதந்திரக் கொடியை எப்போதும் பறக்கச் செய்க (ஸ்ரீமான் சுபாஸ் சந்திரவஸ{), வேட்டுவர் (குல.சபாநாதன்), தமிழரும் அரசியற்றிருத்தங்களும் (நா.குமாரசிங்கம்), ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சதேவர் நூற்றாண்டு நிறைவு விழா (மா.பீதாம்பரன்), எறிந்த மலர் (தேனீ), ஸ்ரீ க.முத்துக்குமாரு வைத்தியர் ஞாபகார்த்தக் கூற்று (ஸ்ரீ வை.இராமநாதன்), இராசமாளிகையில் கீர்த்திபெற்ற இரு கோமாளிகள் (நவீனன்) ஆகிய கட்டுரைகளும், ஆதி மருதி ஓர் இலக்கிய நாடகம் (நவநீத கிருஷ்ண பாரதி), தேவியின் வரம் (சத்தியநாதன்), மாயக் குதிரை (வ.சு.இராஜஐயனார்), இவன் யார்? (எஸ்.நல்லையா), மன நிம்மதி (அழகு), மிகுந்தலைச் சன்னியாசி (சுயா) ஆகிய கதைகளும், கீரிமலை நீரூற்று (நம. சிவப்பிரகாசம்), விடுகவிகள் (ஆண்டான் கவிராயன்), நாமகள் தசாங்கம் (க.சோமசுந்தரப் புலவர்), அருள்வேட்டல் (தேசிக விநாயகம்பிள்ளை), ஈழகேசரி வாழ்த்துப் பாக்கள் (தா.சுவாமிநாதன்), முக்கணனருளிய மக்கண்மொழி மாண்பு (வ.மு.இரத்தினேசுவர ஐயர்), ஸ்ரீமத் அ.குமாரசுவாமிப் புலவர் (க.சிதம்பரநாதன்), வித்துவ சிரோமணி ந.ச.பொன்னம்பலபிள்ளை (ஈழமண்டல சதகம்), தமிழகச் சிறப்பு (R.S.ராஜலட்சுமி), ஆகிய கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 018600).