ஆ.சதாசிவம் (இதழாசிரியர்). கொழும்பு 7: இலங்கைச் சாகித்திய மண்டலம், 135, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, புரட்டாதி 1963. (யாழ்ப்பாணம்: வனிதா அச்சகம், மூன்றாம் குறுக்குத் தெரு).
117 பக்கம், விலை: ரூபா 1.50, அளவு: 23.5×15 சமீ.
கலைப்பூங்கா இதழ் இலங்கை சாகித்திய மண்டலத்தினால் 1960 ஆம் ஆண்டில் இருந்து வெளியீடு செய்ய ஆரம்பிக்கப்பட்டது. இடையில் தடைப்பட்டு 1963முதல் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்பட்டது. 1963இல் இரண்டாவதாக வெளிவந்துள்ள இவ்விதழில் எமது இலக்கியப் பாதை (ஆசிரியர் கருத்து), இலக்கியப் படைப்பின் நோக்கம் (க.வேந்தனார்), இலக்கியமும் வாழ்வும் (சோ.நடராசன்), உள்ளுறை யுவமத்தின் வகையும் உதாரணமும் (ந. சுப்பையாபிள்ளை), ஈழநாட்டிற் செய்யுள் வளர்ச்சி (க.செ.நடராசா), தமிழ் இலக்கிய நெறி (செ.துரைசிங்கம்), சிதைந்த சொற்களுந் தமிழ் மரபும் (ஏ.பெரியதம்பிப்பிள்ளை), பா (க.சச்சிதானந்தன்), உலாப்பிரபந்த வளர்ச்சி (பொ.பூலோகசிங்கம்), மொழிப் பாதுகாவல் (புலவர் பாண்டியனார்), பட்டாங்கிலுள்ளபடி (இ.அம்பிகைபாகன்), சேனாவரையர் உரைச்சிறப்பு (பொன் முத்துக்குமாரன்), ஈழத்து முசுலிம் புலவர் செய்த தமிழ்த் தொண்டு (சனாப் முகம்மது உவைசு), வள்ளுவர் கண்ட அரசு (சி.ஆறுமுகம்), மட்டக்களப்பும் தமிழ் இலக்கியமும் (பி.சே.செ.நடராசா), தமிழிற் சிறுகதை வளர்ச்சி (செம்பியன் செல்வன்), விழாவின் தலைமைப் பேருரை (வி.செல்வநாயகம்)ஆகிய ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 033317).