ஆ.சதாசிவம், செ.துரைசிங்கம் (இதழாசிரியர்கள்). கொழும்பு 7: இலங்கைச் சாகித்திய மண்டலம், 135, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, சித்திரை 1964. (யாழ்ப்பாணம்: வனிதா அச்சகம், மூன்றாம் குறுக்குத் தெரு).
80 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 23.5×15 சமீ.
கலைப்பூங்கா இதழ் இலங்கை சாகித்திய மண்டலத்தினால் 1960 ஆம் ஆண்டில் இருந்து வெளியீடு செய்ய ஆரம்பிக்கப்பட்டது. இடையில் தடைப்பட்டு 1963முதல் ஆண்டுக்கு இருமுறை மலரும் இந்த இதழின் ஆரம்பகால ஆசிரியர்களாக ஆ. சதாசிவம் அவர்களும் சோ.இளமுருகனாரும் இருந்தனர். சோ. இளமுருகனார் விலக செ.துரைசிங்கம் அவர்கள் ஆ .சதாசிவத்துடன் இணைந்து கொண்டார். இந்த இதழ் கொழும்பில் இருந்து வெளியானது. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் தாங்கி வந்தாலும் கட்டுரைகளை பிரதானப் படுத்தியே இந்த இதழ் வெளியானது. பழம் இலக்கியங்களை முன்னிலைப் படுத்திய கட்டுரைகள் இதில் வெளிவந்தன. மிக காத்திரமான கட்டுரைகளாக இவை அமைந்திருந்தன. நான்காவது இதழாக வெளிவந்துள்ள இவ்விதழில், பண்டிதம் (ஆசிரியர் கருத்து), இலட்சியமும் சமநோக்கும் (ஏ.பெரியதம்பிப்பிள்ளை), கம்பன் தந்த மக்கள் இலக்கியம் (சத்தியதேவி துரைசிங்கம்), சங்க இலக்கியத்தில் திருவிழா (சு.அருளம்பலவனார்), பல்லவர் கால பத்தி இலக்கியம் (ச.தனஞ்சயராசசிங்கம்), ‘ஞான விளக்கு’ (மு.சோமசுந்தரம்பிள்ளை), ‘இலக்கா’ ஆராய்ச்சி (வி.சீ.கந்தையா), இலக்கணம் ஏன்? (வ.நடராசன்), கலைச்சொல்லாக்கம் (அ.வி.மயில்வாகனம்), குத்புநாயகம் என்னும் முகியித்தீன் புராணம் (முகம்மது உவைசு), மொழி மரபு (பாண்டியனார்) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 16372).