ஆ.சதாசிவம், செ.துரைசிங்கம் (இதழாசிரியர்கள்). கொழும்பு 7: இலங்கைச் சாகித்திய மண்டலம், 135, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, புரட்டாதி 1964. (யாழ்ப்பாணம்: வனிதா அச்சகம், மூன்றாம் குறுக்குத் தெரு).
80 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 23.5×15 சமீ.
கலைப்பூங்கா இதழ் இலங்கை சாகித்திய மண்டலத்தினால் 1960 ஆம் ஆண்டில் இருந்து வெளியீடு செய்ய ஆரம்பிக்கப்பட்டது. இடையில் தடைப்பட்டு 1963முதல் ஆண்டுக்கு இருமுறை வெளியிடப்பட்டது. நான்காவது இதழ் 1963இல் வெளிவந்துள்ளது. இவ்விதழில் பழமையும் புதுமையும் (ஆசிரியர் கருத்து), தமிழ் மரபும் பேராசிரியரும் (க.நாகலிங்கம்), மரபும் வழக்கும் (பி.சே.செ.நடராசா), மரபும் ஆக்கமும் (ஏ.பெரியதம்பிப்பிள்ளை), மரபு (செ.துரைசிங்கம்), இலக்கிய மரபு (பாண்டியனார்), இலக்கிய நுகர்வு (வ.நடராசா), இசை மரபு (பி.சந்திரசேகரம்), நாடக மரபு (ஆ.த.பொன்னுத்துரை), மகாகவி இக்பாலின் தத்துவம் (எம்.ஏ.ரகுமான்), இசுலாமுந் தமிழும் (ம.முகம்மது உவைசு), உரைநடையிற் சிறுகதை மரபு (ச.பொன்னுத்துரை) ஆகிய படைப்பாக்கங்கள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000700).