13654 கலைப் பூங்கா 1965(1).

ஆ.சதாசிவம், செ.துரைசிங்கம் (இதழாசிரியர்கள்). கொழும்பு 7: இலங்கைச் சாகித்திய மண்டலம், 135, தர்மபால மாவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1965. (யாழ்ப்பாணம்: ஆசீர்வாதம் அச்சகம், இல. 32, கண்டி வீதி).

79 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 23.5×15 சமீ.

இலங்கை சாகித்திய மண்டலத்தினால் வெளியிடப்பட்டு வரும் கலைப்பூங்கா இதழின் 1965ஆம் ஆண்டுக்கான முதலாவது இதழ் இதுவாகும். செந்தமிழ் (ஆசிரியர் கருத்து), இலக்கியமும் நாட்டு வருணனையும் (பொன். முத்துக்குமாரன்), சோழர்காலப் பெருங்காப்பியங்கள் (ச.தனஞ்சயராசசிங்கம்), ‘திருவாக்கு” என்னும் ‘திருநூல்” தமிழில் வளர்ந்த வரலாறு (பி.சே.செ.நடராசா), திருவாசக ஆராய்ச்சிப் பேருரையின் மாண்பு (க.நாகலிங்கம்), செந்தமிழ்ச் சிறப்பு (சி.சின்னையா), இராமனின் சுந்தரத் தோற்றமும் விபீடணனுக்களிக்குங் காட்சியும் (பொ.கிருட்ணபிள்ளை), இலக்கியமுஞ் சமூக வாழ்வும் (ஏ.பெரியதம்பிப்பிள்ளை), பரிசில் வாழ்க்கை (அ.கனகசபை) ஆகிய ஆக்கங்கள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் நூலகம் நிறுவன இணையத்தள நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 000826).

ஏனைய பதிவுகள்