கதிரவன் த.இன்பராசா (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: கண்ணகி கலை இலக்கியக் கூடல், 45A, பிரதான வீதி, சின்ன ஊறணி, 1வது பதிப்பு, 2016. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).
114 பக்கம், புகைப்படங்கள், விளக்கப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5 சமீ.
2016 ஜுன் 25 முதல் 26 வரை மட்/கன்னன்குடா மகாவித்தியாலய மண்டபத்தில் கண்ணகி கலை இலக்கியக் கூடல் அமைப்பினரால் ஒழுங்குசெய்யப்பெற்ற கண்ணகி கலை இலக்கிய விழாவினையொட்டி வெளியிடப்பெற்ற 2016க்கான ஆண்டு மலர் இது. 2015ஆம் ஆண்டின் நிகழ்வுகளின் தொகுப்பாகவும் அமையும் இம்மலர்; அமைப்பினரின் பல்வேறு அறிக்கைகளுடன், உரைகள், சிறப்புச் சொற்பொழிவுகள், நூல் அறிமுக உரைகள், ஆய்வுரைகள், ஆய்வு மதிப்பீட்டுரைகள் என்பவற்றையும் உள்ளடக்கியதாக வெளிவந்துள்ளது. ஆய்வுரைகளாக ‘கிழக்கிலங்கையில் கண்ணகி வழக்குரை காதை கோயில்களில் பாடப்படும் முறைமை’ (ப.44-50, செல்வி க.ஜீவரதி), ‘கிழக்கிலங்கைக் கண்ணகியம்மன் குளுர்த்திப் பாடல்கள்’ (ப.51-57, திருமதி பிரியதர்ஷினி ஜதீஸ்வரன்), ‘கிழக்கிலங்கைக் கண்ணகை அம்மன் காவியங்கள்’ (ப.58-68, செல்வி கதிராமன் தங்கேஸ்வரி), ‘கிழக்கிலங்கைக் கண்ணகையம்மன் பத்ததிகள்/பத்தாசிகள்’ (ப.70-78, வ.குணபாலசிங்கம்) ஆகிய ஆக்கங்களும், ‘சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் பாத்திரப் படைப்பு’ (ப.81-87, வேலப்போடி ஜெகதீபன்) என்ற கட்டுரையும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 60789).