13660 தமிழ் சாகித்திய விழா சிறப்பு மலர் 1993.

மலர்க் குழு. கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள், இராஜாங்க அமைச்சரின் அலுவலகம், 1வது பதிப்பு, ஜுலை 1993. (கொழும்பு: சிலோன் பிரின்டேர்ஸ் நிறுவனம்).

(36), 136+38 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

கொழும்பு மாநகரில் ஜுலை 1993 இல் இடம்பெற்ற தமிழ் சாகித்திய விழாவின்போது வெளியிடப்பெற்ற சிறப்பு மலர். வாழ்த்துரைகள், ஆசியுரைகளுடன் வெளியிடப்பெற்றுள்ள இச்சிறப்பிதழில், பழந்தமிழ் இலக்கியத்தில் கலையும் கலைக்கோட்பாடும் (கு.வே.பாலசுப்பிரமணியன்), சிலப்பதிகாரத்தில் கிராமிய இலக்கியப் படிமங்கள் (பொ. பூலோகசிங்கம்), ஆறுதலும் உற்சாகமும் அளிக்கும் நாட்டார் பாடல்கள் (சி.தில்லைநாதன்), நாட்டார் இலக்கியமும் பெண்களும் – சில பொதுக் குறிப்புகள் (சித்திரலேகா மௌனகுரு), கிராமிய இலக்கியம் பற்றிய ஆய்வில் சமூக சந்தர்ப்பத்தின் முக்கியத்துவம் (எம்.ஏ. நுஃமான்), மட்டக்களப்புப் பகுதி மாரியம்மன் வழிபாட்டில் காணப்படுகின்ற சடங்குகளும் நம்பிக்கைகளும் – ஓர் ஆய்வு (செல்வி சுகந்தி சுப்பிரமணியம்), திருகோணமலை நாட்டார் வழக்காற்றியல் ஓர் அறிமுகம் (பா.சுகுமார்), மலையக நாட்டார் பாடல்கள் ஒரு கவன ஈர்ப்பு (சி.அழகுப்பிள்ளை), இருளர் நாட்டுப்புறக் கதைப் பாடல்கள்-கருத்தும் அமைப்பும் (கி.கருணாகரன், வ.ஜெயா), முத்துப்பட்டன் கதைப் பாடல் (சு.சக்திவேல்), உடுக்கடி கதையும் அதனுடன் தொடர்புடைய வேறு தகவல்களும் (காரை. சுந்தரம்பிள்ளை), அரங்கும் சமூகமும்: தமிழ் நாடகம் பற்றிய ஒரு நோக்கு (கார்த்திகேசு சிவத்தம்பி), பாண்டிருப்பு திரௌபதை அம்மன் கோவில் பாரதச் சடங்கு – ஒரு நாடக நிலை நோக்கு (சி. மௌனகுரு), கூத்தைப் பற்றிய சில குறிப்புகள் (நீ.மரியசேவியர் அடிகள்), இலங்கை முஸ்லிம்களின் கோலாட்ட மரபும் கோலாட்டப் பாடல்களும் (எம்.எஸ்.எம். அனஸ்), கர்நாடக இசை வளர்ச்சியில் விமர்சனத்தின் பணி (சாந்தி சச்சிதானந்தம்), Some Observations on the Influence of Tamil Culture of that of the Sinalese (Ediriwira Sarachchandra), Cultural Interaction in the Field of Rural Theatre-A View Point (M.H.Goonatilleke), Indian Influence on Sri Lankan Dance Forms – with Special reference to Bharata Natyam and Kathakali (A. Thevarajan), The Town of  Vikkriramacalameka Puram in the 12th Century A.D. (S.Pathmanathan) ஆகிய கட்டுரைகளும், சாகித்திய நூற் பரிசுகள் – 1991, சாகித்திய விருதுகள் இலக்கிய, தமிழியல் துறைகள், சாகித்திய விருதுகள் கலைத் துறை ஆகிய விபரங்களும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 13594).

ஏனைய பதிவுகள்

Greatest No-deposit Incentives 2024

Posts Tricks for Improving Your No-deposit Totally free Revolves Added bonus Form of Online casino games The lowest home edge means that, in comparison to

The Uk Local casino Opinion 2024

Blogs Popular features of An educated Us Mobile Gambling enterprises How to Pay By Phone in Web based casinos? As much as 100 No-deposit Spins