க.பரணீதரன்; (பிரதம ஆசிரியர்). அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, தை 2017. (யாழ்ப்பாணம்: மதி கலர் பிரின்டர்ஸ், 15/2, முருகேசர் ஒழுங்கை, முத்திரைச் சந்தி, நல்லூர்).
574 பக்கம், சித்திரங்கள், விளக்கப்படங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 700., அளவு: 30×21.5 சமீ.
2007ஆம் ஆண்டு ஆவணி மாதம் தொடங்கப்பட்ட ஜீவநதி சஞ்சிகையின் நூறாவது இதழ் இது. ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் சிறப்பிதழாக வெளிவரும் இப்பாரிய தொகுப்பு ஜீவநதி வெளியீடு செய்யும் 15ஆவது சிறப்பிதழுமாகும். இவ்விதழில் 90 ஈழத்துப் பெண் எழுத்தாளர்கள் பற்றிய கட்டுரைகளும், 33 பெண் படைப்பாளிகளின் சிறுகதைகளும், 46 பெண் கவிஞர்களின் கவிதைகளும், வெற்றிச் செல்வியின் குறுநாவலும், 17 படைப்பாளிகள் பற்றிய சிறுகுறிப்புகளும், 29 பெண் படைப்புக்கள் சார் கட்டுரைகளும் இடம்பெறுகின்றன. பெண் படைப்புகள் சார் கட்டுரைகளாக பின்வரும் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. தமிழ்ச் சூழலில் பெண்ணியம் (சபா ஜெயராசா), புனையப்பட்ட பிரதிகளும் புரட்ட மறுத்த பக்கங்களும்: தற்கால ஈழத்துப் பெண் கவிதாளுமைகளை முன்வைத்து (சி.ரமேஷ்), மலையக பெண் எழுத்தாளர்கள் (மொழிவரதன்), சங்க காலத்தில் பெண்கள் (கிருஷ்ணபிள்ளை நடராசா), ஈழத்துத் தமிழ்ப் பெண்களின் நாவல்கள் (த.அஜந்தகுமார்), நாட்டார் பாடல்களில் பெண்கள் (எம்.ஐ.எம்.ஹனிபா), பெண் உடல்: ஓர் ஆண் மையமான கருத்துநிலையான பெண் பற்றிய கட்டமைப்பாக்கம் (இ.இராஜேஸ்கண்ணன்), முப்பாலில் பெண்பாலார் மாண்பு (மனோன்மணி சண்முகதாஸ்), போராளிகளின் கவிதைகள் சில அவதானங்கள் (செ.யோகராசா), ஆரம்பகாலச் சிங்கள நாவல்களில் பெண் பாத்திரங்கள் (லறினா அப்துல் ஹக்), போருக்குப் பின்னராக பெண்களின் வாழ்வு (ச.முருகானந்தன்), ஈழத்துப் பெண்நிலைவாத சஞ்சிகைகள் (தி.செல்வமனோகரன்), தாய்மை உணர்வுகளைப் பதிவுசெய்துள்ள பெண்களின் கவி, (சி.சந்திரசேகரம்), ஈழத்து நாட்டார் பாடல்களில் பெண்களின் மொழி (வானதி பகீரதன்), சங்க இலக்கியப் பொருள்மரபும் ஈழத்துப் பெண்களின் கவிதைகளும் (அம்மன்கிளி முருகதாஸ்), பெண்ணிலைவாதம் உலகளாவிய இக்காலத்தில் இலங்கையில் முஸ்லிம் பெண்ணிலைவாத ஆக்க இலக்கியம் (ஏ.இக்பால்), ஒல்லாந்தர் காலத்தில் பெண்கள் எதிர்கொண்ட சவால்கள் (ந.குகபரன்), இலங்கைத் தமிழ் ஆய்வில் பெண்கள் (தமிழ்நேசன்), பெண்ணியம் (நிவேதா உதயராஜன்), புரிதலற்ற பெண்ணியத்தினால் பிறழ்படும் பெண்ணியம் (சந்திரகாந்தா முருகானந்தன்), பொட்டு (கலாநிதி ஜீவகுமாரன்), ஊடகத்துறையில் பெண்கள் (சௌந்தரி), நான்கு பெண்கள் (அ.யேசுராசா), பெண்மொழிகள் முகநூல் கவிதைகள் குறித்து (வேலணைதாஸ்), மூடுபெட்டி: போதிக்கப்பட்ட கருத்தியல் (ந.மயூரரூபன்), பெண்கள் கல்வி ஆய்வு நிறுவகம் (ஹம்சகௌரி சிவபாலன்), மகளிர் அபிவிருத்தி நிலையம் (சரோஜா சிவச்சந்திரன்), குரலற்றவர்களின் குரல் ஊடறு (எஸ்தர்), சூரியா பெண்கள் அபிவிருத்தி அமைப்பு (விஜயலக்ஷ்மி). (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 61471).