ஓ.கே.குணநாதன். மட்டக்களப்பு: எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம், இல.64, கதிர்காமர் வீதி, அமிர்தகழி, 1வது பதிப்பு, கார்த்திகை 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).
(74) பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-8715-82-6.
இக்கவிதைத் தொகுப்பின் வெற்றுப் பக்கங்கள் தோறும் அடிக்குறிப்பாக 2-3 வரிகளில் அமைந்த நறுக்கான லிமரிக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. உதாரணத்துக்குச் சில:
‘ஆக்கிரமிப்பு அரக்கனின்
புதுரக ஆயுதம்
விறைத்துப்போன ஆண்குறி’
‘செல் பறவை
கூவிக்கூவிப் பறக்கிறது
இரைதேடி’
இந்நூல் 71ஆவது பிரியா பிரசுரமாக வெளிவந்துள்ளது. ‘முப்பது ஆண்டுக்கால ஈழப் போராட்டத்தின் இறுதிக்கட்ட உக்கிர போரில் மக்கள் அடைந்த துயரம் துடைக்க முடியாதவை. அந்தக் கணங்கள் இன்னும் வலிக்கின்றன. அவை இலகுவில் மறந்துவிட வெறும் நினைவுகளல்ல. உயிரோடு உறைந்த வலிகள். அந்த மண்ணில் அதே மக்களோடு வாழ்ந்தவன் நான். அதனால் அந்த வலிகளைத் தூக்கி எறிய முடியவில்லை. உயிர் வலிக்கிறது. அந்தக் கண வலியின் வரலாற்றுச் சாட்சியங்களே குருதியோடு கலந்து எலும்புகளால் கட்டி தசையால் வேய்ந்த அகதிக்குடிசை’ (ஓ.கே.குணநாதன், 27 கார்த்திகை 2012).