அம்பிகை பஞ்சலிங்கம். யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, ஆடி 2019. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).
xii, 81 பக்கம், விலை: ரூபா 350., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-38944-1-0.
‘அநேகி’ யை தன் இதயத்தின் மொழிபெயர்ப்பாகக் கருதும் இக்கவிஞர் காலச்சாகரத்தில் தன்னைத் தோல்விகள் தழுவிக்கொண்டபோது தன் கைகளுக்கெட்டிய தடுப்புகளாக தான் வரையும் கவிதைகளைக் காண்கிறார். தோல்வி, நம்பிக்கையீனம், விரக்தி, சோகம் முதலிய எதிர்மறை உணர்வுகள் இவரின் கவிதைகளில் ஆங்காங்கே இழையோடியுள்ளன. இத்தொகுதி, கவிதை இலக்கியம் என்பதைத் தாண்டி உரைக் கவிகள் என்ற கவிதைப் பாங்கான உரைநடைப் பண்பை அதிகம் கொண்டுள்ளன. எளிய சொல்லடுக்கமைவுகளின் ஊடாக வாழ்வைத் தன்னியல்பில் வழிந்தோட விட்டிருக்கிறார். அம்பிகை புதிய கற்பனைகள், சொற்பிரயோகங்கள் ஆகியவற்றால் தன் கவிதைகளை அழகுபடுத்தியுள்ளார். நான் அவள் இல்லை, தன்மை, முட்டாள் தேவதை, விடுதலைநாள், மௌனமொழி, குதிரைக் கொம்பு, பெண்பாவம், காலத்தேர், சுதந்திரபூமி, அற்றைத் திங்கள், நடிகர்தேசம், இருதாரம், இறைதுகள், தடையுத்தரவு, தீர்மானிக்கப்பட்ட நான், நீலநிர்வாணம், நாகரிகம், மரணத்திற்கு மடல், பாதையின் கதை, அநேகி, பச்சோந்திகள், கனவுத் தொழிற்சாலை, ஆலம்விதை, கனவுக்குச் சொந்தக்காரி, காற்று வரட்டும், சொல்லற, இடை விலகல், எண்ண மூட்டை, நிஜம் அறிதல், நமக்குத் தொழில் கவிதை ஆகிய தலைப்புக்களில் இக்கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. இது இவரது இரண்டாவது கவிதைத் தொகுதி.