கூடலூர் சிந்துஷன் (இயற்பெயர்: இராசேந்திரம் சிந்துஷன்). வேலணை: தாய்சக்தி கலைக்கூடம், புளியங்கூடல், 1வது பதிப்பு, ஐப்பசி 2018. (யாழ்ப்பாணம்: தீபம் பிரிண்டர்ஸ், 717, காங்கேசன்துறை வீதி).
(14), 71 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 250., அளவு: 20×13.5 சமீ., ISBN: 978-955-71411-0-7.
கூடலூர் சிந்துஷனின் முதலாவது கவிதைத் தொகுப்பு. யா/வேலணை மேற்கு நடராஜ வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும், வேலணை மத்திய கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்ற இவர், இளம் வயது முதலே தன் எழுத்தாற்றலை வளர்த்துக்கொண்டவர். இவரது கவிதைகளில் சில சமூக நலனை அவாவி நிற்கின்றன. பெரும்பாலானவை காதல் கவிதைகளே. அந்தி சாயும் பொழுது என்ற முதலாவது கவிதையிலிருந்து உன்னில் என்னைத் தொலைத்தேன் என்ற இறுதிக் கவிதை ஈறாக ஐம்பது கவிதைகளை இத்தொகுப்பில் இணைத்திருக்கின்றார்.