இராஜேஸ்வரி சிவராசா. ஜேர்மனி: ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம், இணை வெளியீடு, ஜேர்மனி: மண் கலை இலக்கிய சமூக சஞ்சிகை, Am Windhovel 18a, 47249 Duisburg, 1வது பதிப்பு, 2019. (ஜேர்மனி: அச்சக விபரம் தரப்படவில்லை).
116 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×15 சமீ.
உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்ட திருமதி இராஜேஸ்வரி சிவராசா, 1984இலிருந்து கடந்த 34 வருடங்களாக ஜேர்மனியில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகின்றார். ‘மண்’ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றும் இவர், அதன் பிரதம ஆசிரியர் வைரமுத்து சிவராசாவின் துணைவியாராவார். ஜேர்மன் தமிழ்ப் பாடசாலையின் ஆசிரியராகவும் பணியாற்றிய இவர், தாயகத்திலும் புகலிடத்திலும் தன் மனதைப்பாதித்த விடயங்களை அவ்வப்போது கவிதைகளாக எழுதிவந்துள்ளார். இவரது படைப்பாக்கங்களில் தேர்ந்த 100 கவிதைகளை இத்தொகுப்பில் இடம்பெறவைத்துள்ளார்.