13682 கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்.

தானா விஷ்ணு (இயற்பெயர்: தம்பித்துரை விஷயசங்கர்). யாழ்ப்பாணம்: தூண்டி இலக்கிய வட்டம், 141, கேணியடி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 424, காங்கேசன்துறை வீதி).

 viii, 47 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 18.5×12.5 சமீ., ISBN: 978-955-54773-0-7.

வடபுலத்தில், பலாலியில் 1976இல் பிறந்த தானா – விஷ்ணு, 1990களின் பிற்பகுதியிலிருந்து கவிதை எழுதி வருகிறார். யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட உள்ளக இடப்பெயர்வின்பின் இமையாணன் கிராமத்தில் இவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். யாழ். பல்கலைக்கழகத்தில் சமூகவியல்துறையில் சிறப்புப் பட்டம் பெற்று ஆசிரியராகப் பணியாற்றும் இவர், யாழ்ப்பாணம் வடமராட்சியில் இயங்கும் உயில் என்ற கலை இலக்கிய அமைப்பின் செயற்பாட்டாளர்களில் ஒருவராகவும் உள்ளார். நினைவுள் மீள்தல் (2003) இவரது முதலாவது கவிதைத் தொகுதியாகும். ‘கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள்’ இவரது அண்மைக்காலக் கவிதைகளின் தொகுப்பாகும். பிரியம் மறுத்தவளுக்கு, ஈரமற்ற புன்னகை, கறுப்புருவம் சுமக்கும் ஆந்தைகள், மரங்கொத்தி, தீப்பிடித்தெரியும் வார்த்தைகள், பூனைகளின் விழிகள் அல்லது பறவைகளின் உதிர்ந்த இறகுகள், நடுநிசிப் பொம்மைகள், பரிவு, சிலந்தி வலை, தணலடங்காக் கோபம், அமைதியைத் தின்ற பூதம், உருக்குலைந்த எனது விம்பம், யேசுபிரானின் வெள்ளாடு, ஓவியத்தின் கோடுகளில் நீளும் வாழ்ந்துபோனவனின் குறிப்பு, கோடுகள், கசப்புவெளி, சிதறுண்ட காலக் கடிகாரம், கடைசி நட்சத்திரம், கனத்த நாள், பிரம்மதேவர்கள், அந்நியமாதல், வாழ்வொளிர் காலம், நிழற்படங்கள், வனாந்தர இரவுகள், குழந்தைகளின் விழிகளிலாடும் வெளவால், காலபைரவன், ஒற்றைக்கால் கொக்கு, பெருஞ்சுடரிற் கருகிப்போன விட்டிற்பூச்சி, வெந்தணலென எரியும் தேகம், குயவன் வனையும் இரண்டுசோடிச் சிறகுகள், மூன்று நட்சத்திரங்கள், ஒரு சாம்ராச்சியம்-மூன்று நாய்கள் ஆகிய தலைப்புகளிலான 34 கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்