13683 கால் பட்டு உடைந்தது வானம்.

எஸ்தர். சென்னை 600014: போதிவனம் பதிப்பகம், அகமது வணிக வளாகம், தரைத்தளம், 12/293, இராயப்பேட்டை நெடுஞ்சாலை, இராயப்பேட்டை, 1வது பதிப்பு, மார்ச் 2018. (சென்னை 600 005: அண்ணாமலை பிரின்டர்ஸ்).

136 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 21×14 சமீ., ISBN: 978-93-80690-54-4.

எஸ்தர் மலையகத்தில் அட்டன்-டிக்கோயாவைப் பிறப்பிடமாகவும் திருக்கோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர். அட்டன் ஹைலன்ட் கல்லூரியில்ஆரம்ப உயர்கல்வியைப் பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்தில்அரசறிவியல் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் இதழியல் டிப்ளோமா கல்வியையும் பெற்றவர். கால் பட்டு உடைந்தது வானம் இவரது முதலாவது கவிதைத் தொகுதி. இக்கவிஞர் பார்க்கின்ற வானம் சிவந்திருக்கிறது மலையக மக்களின் குருதியைப் போல. மழையிலோ கண்ணீரின் உப்புக் கரிக்கின்றது. நிலவில் கிரகணங்கள் சூழ்ந்திருக்கின்றன. பறிபோன உயிர்களின் வலி சொற்களில் உறைந்து கிடக்கின்றன. அனாதையான தேசத்தின் ஏக்கங்கள் பெருமழையாய் கவிதைகளின் இடையிடையே கொட்டித் தீர்த்தபடியிருக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 062996).

ஏனைய பதிவுகள்

12498 – யா/கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரி: 150ஆவது ஆண்டு நிறைவு மலர் 1852-2002.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரி, கோப்பாய், 1வது பதிப்பு, 2002. (யாழ்ப்பாணம் பிள்ளையார் அச்சகம்). 149 பக்கம், புகைப்படங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×20.5 சமீ. கோப்பாய் பிரதேசத்தில் ஒரு கிறிஸ்தவ

14618 தேவதையின் அந்தப்புரத்தில் பட்டாம்பூச்சிக் குடியிருப்பு.

ராஜகவி ராஹில். தமிழ்நாடு: அகநாழிகை பதிப்பகம், 26, ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு 603001, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2016. (அச்சக விபரம் தரப்படவில்லை). 80 பக்கம், சித்திரங்கள், விலை: இந்திய ரூபா 100.00,