13684 சமாதிச் சத்தங்கள்.

ஓட்டமாவடி எம்.பீ.நளீம். வாழைச்சேனை: இஸ்லாமிய கலை இலக்கிய கலாசாரப் பேரவை, 1வது பதிப்பு, ஜனவரி 2003. (அச்சக விபரம் தரப்படவில்லை).

xii, 80 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 955-8409-04-9.

வாழைச்சேனை, இஸ்லாமிய கலை இலக்கிய கலாசாரப் பேரவையின் ஐந்தாவது பிரசுரமாக மாவடிச்சேனை, எம்.பீ.நளீம் எழுதிய கவிதைகளின் தொகுப்பு வெளிவந்துள்ளது. கல்குடா இஸ்லாமிய படைப்பிலக்கிய வளர்ச்சிக்கு உலமாக்களின் பங்களிப்பு கணிசமானதாகும். மீரா முஹைதீன் ஆலிம் புலவர், அப்துஸ் ஸமது ஆலிம் புலவர், லெப்பைத் தம்பி ஆலிம் புலவர் வரிசையில் இப்பட்டியலில் கவிஞர் எம்.பீ.நளீமும் இணைந்துகொண்டுள்ளார். இருப்பு பற்றிய அச்சம், கருத்துச் சுதந்திர மறுப்பு, மாற்று இனங்களின் வளர்ச்சி மீது கொண்ட காழ்ப்புணர்வு, அதிகாரங்களை கையில் எடுத்துக்கொண்ட சர்வாதிகாரப் போக்கு, முஸ்லிம்களின் ஸ்திரமற்ற அரசியல் நிலை என்பவற்றின் பின்புலத்தினூடாக உயிர், உடைமை, இருப்புக்களின் மீதான பீதிக்கு மத்தியில் தான் அனுபவித்த, அனுபவித்துவரும் இன்னல்களைத் தன் எண்ண உணர்வுகளின் கலவையினால் இங்கு கவிதையாக்கியிருக்கிறார். ‘விரலிடையில்’ தொடங்கி ‘கண்ணீர்த் தோரணம்’ ஈறாக மொத்தம் நாற்பது கவிதைகளை இங்கு காணமுடிகின்றது.

ஏனைய பதிவுகள்