சு.தவச்செல்வன். நுவரஎலிய: கொட்டகலை தமிழ்ச்சங்கம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2015. (அச்சக விபரம் தரப்படவில்லை)
92 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-44552-3-8.
சிவப்பு டைனோசர்கள் என்ற இவரது முன்னைய கவிதைத் தொகுதியைத் தொடர்ந்து வெளிவரும் இரண்டாவது தொகுப்பு இது. இக் கவிதைத் தொகுப்பில் தக்கன பிழைக்கும் என்ற டார்வினின் கருத்தியலை, மனித வரலாற்றுக் கொள்கையை, தனது பார்வையில் பொருத்திச் சமூகத்தைத் தரிசிக்கிறார். ஆசிரியரால் எழுதப்பட்ட 70 கவிதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. மலையக சமூக அரசியல் தொடர்பாகவும், தமிழர்கள் மீதான இன நெருக்கடிகள் தொடர்பாகவும், நாமெல்லாம் இலங்கைத் தேசத்தவர் என்ற சிந்தனையையும் பாடுபொருளாகக் கொண்ட கவிதைகள் இவை. பொருத்தமான படிமங்கள் இவரது கவிதைகளுக்கு அழகுசேர்க்கின்றன. கவிதை மொழியும் சிறப்பாக அமைந்துள்ளது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 59931).