ச.வே.பஞ்சாட்சரம் (மூலம்), லேனா தமிழ்வாணன் (பதிப்பாசிரியர்). சென்னை 600 017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, 7(ப.எண் 4), தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2017. (சென்னை 94: ஸ்கிரிப்ட்ஸ் ஆஃப்செட்).
xxvi, 182 பக்கம், விலை: இந்திய ரூபா 130.00, அளவு: 21×14 சமீ.
கவிஞர்.ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் இந்து சாசனம், கலைச் செல்வி ஆகிய ஈழத்துப் பத்திரிகைகளின் உதவி ஆசிரியராகவும், பின்னர் கனடாவுக்குப் புலம்பெயர்ந்த பின்னர் கனடாவில் உங்கள் நண்பன் பத்திரிகைக்கு ஆசிரியராகவும் இருந்து வருகிறார். பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் அவர்கள் எழுதிய 113 கவிதைகளைக் கொண்ட தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. அமைதிவழிப் போராட்டக் காலம் என்ற முதலாவது பிரிவில் 14 கவிதைகளும், ஆயுதப் போராட்டக் காலம் என்ற இரண்டாவது பிரிவில் 38 கவிதைகளும், இறுதிப்பிரிவானஆன்மீக வழிப் போராட்டக் காலத்தின் கீழ் 61 கவிதையுமாக மொத்தம் 113 தமிழீழ எழுச்சிக் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. கவிஞர்.ச.வே.ப. கவிதை, சிறுகதை, நாவல்கள், குட்டிக் கதைகள், உருவகக் கதைகள், வரலாறு, இலக்கணம், குறுங்காவியங்கள் என 90க்கும் அதிகமான நூல்களை வெளியிட்டவர். 15,000க்கும் மேற்பட்ட கவிதைகள், 40 ஊஞ்சல் பாட்டுக்கள் போன்றவற்றை எழுதியுள்ளார். மற்றும் திருவிரட்டை மணிமாலை, மும்மணிக் கோவை, நான்மணி மாலைகள், தல புராணங்கள், தூதுகள், கண்ணன் கவசம், விடுதலை கீதங்கள் என இவரின் படைப்புகளின் பட்டியல் மிக நீண்டது.