பாரதி மைந்தன் (இயற்பெயர்: அருள்தாஸ் கிளைம்சென்). முல்லைத்தீவு: பாரதிதாசன் சனசமூக நிலையம், மந்துவில், புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஜனவரி 2018. (யாழ்ப்பாணம்: ஜெயஸ்ரீ பிரின்டர்ஸ், 34, பிரவுண் வீதி).
(30), 97 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 300., அளவு: 18×12 சமீ., ISBN: 978-955-71109-0-5.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் மந்துவில் என்னும் கிராமத்தில் பிறந்து வளர்ந்து பின் மன்னாருக்கு குடும்பத்துடன் சென்று தன்னுடைய ஆரம்பக் கல்வி தொடக்கம் க.பொ.த. உயர்தரம் வரை மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் கற்று முடித்தபின்னர் மீண்டும் தன் சொந்த இடத்திற்கு மீளக்குடிபெயர்ந்தவர் இவ்விளம் படைப்பாளி. டான் தொலைக்காட்சியில் தன் கவிதைகளை அரங்கேற்றியவர். இந்நூல் இவரது இரண்டாவது கவிதை நூலாகும். இதில் இவர் எழுதிய 60 கவிதைகள் இடம்பெற்றுள்ளன.