நகுலா சிவநாதன். ஜேர்மனி: திரு. வீ.எஸ்.சிவநாதன், Ludinghausener str-12A, 59379 Selm, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (சென்னை 600 035: டிரீம் பிரிண்ட்ஸ், 16/57, பேன் பேட்டை, 2வது தெரு, நந்தனம்).
viii, 92 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14.5 சமீ.
கற்பனைக்கு எட்டிய தூரம் வரை இயற்கை மனிதனுக்கு புதுமையைத்தான் படையலிட்டு வைத்திருக்கின்றது. அதனை நுகர்ந்து தெளிந்து மகிழ்ந்திருக்கும் நகுலா, நதிக்கரை நினைவுகள் என்னும் இந்நூலினை தன் கற்பனைச் சிறகின் விரிப்பாக, காதல் இயற்கை, வாழ்வியல் கவிதைகளாக மலரவைத்துள்ளார். நதிக்கரையோரம் அலைகளைப்(?) பார்க்கையில் பொங்கும் கடலலை போன்று சிந்தனைகள் கவியாக இவரிடம் சூல்கொள்கின்றன. அக்கற்பனையின் முகிழ்ப்பில் பிறந்திட்ட கவி முத்துக்களை நாற்றாக வாசகர் முன்னிலையில் படையலிட்டுள்ளார். 25 வருட தமிழ்ப்பணியில் முனைப்புடன் எழு என்ற முதலாவது கவிதை நூல் தொடங்கி, 11 நுல்களை இதுவரை இவர் வெளியிட்டுள்ளார். தனது 12ஆவது நூலாக இக்கவிதைத் தொகுதியை வெளியிட்டுள்ளார்.