13698 நீரின் நிறம் (கவிதைகள்).

க.சட்டநாதன். யாழ்ப்பாணம்: க.சட்டநாதன், மறுபாதி, 21, சட்டநாதர் வீதி, நல்லூர், 1வது பதிப்பு, ஜுலை 2017. (யாழ்ப்பாணம்: ஆகாயம் பதிப்பகம், இமையாணன், உடுப்பிட்டி).

xx, 62 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×13.5 சமீ., ISBN: 978-955-38307-0-8.

வேலணையைப் பிறப்பிடமாகக்கொண்ட க. சட்டநாதன் (22.04.1940), ஈழத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதையாளர். பூரணி காலாண்டிதழின் இணையாசிரியராக இருந்தவர். இவரது ‘உலா” சிறுகதைத் தொகுப்புக்கான அரச சாகித்ய மண்டல விருது 1995இல் இவருக்குக் கிடைத்தது. ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் கவிதைத்துறையிலும் ஆர்வம் மிக்கவர். இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு இதுவாகும். இதில் இலக்கு, தீ, கவிதை, நீரின் நிறம், மௌனம், பாலைப் புதிர், ஆராதனை, படிமம், அவன் காணாமல் போனபோது, கலவரம், ஒளி, அரசி, காகங்கள், குழப்பம், சிநேகம், தோற்றங்கள், அவள், துயரம் இன்னும் தூரமாய், எல்லாமே பிடிக்கும், மருந்து, கடவுள், அம்மாவைப்போல, பெண் ஜென்மம், அன்பு, தொடுகை, புலன்களில் அவள், வெம்மை, சுபசகுனம், அது, காத்திருப்பு, இருப்பு, நண்பனாய், பிரபஞ்ச அதிர்வு, பிணையாய் நான் தான் ஆகிய தலைப்புகளில் எழுதப்பெற்ற தேர்ந்த கவிதைகள் இடம்பெற்றுள்ளன. ‘இவை எளிய தருணங்களின்மீது படரும் வலியை ஆழமாக வெளிப்படுத்துபவை. தனிமை அல்லது வெறுமையின் மீது துயரிசையாகக் கவிபவை. நெகிழ்வும், சொல்லடர்த்தியும் மிகுந்த புனைவுத்தியை அவர் தனது கவிதைகளில் பயன்படுத்தியுள்ளார். புறத் தோற்றத்தில் அல்லது வெளிப்பாட்டு முறையில் சாதாரணமானவையாகத் தோற்றம் காட்டும் கவிதைகள் பலவும் அவரின் வாழ்நிலை அனுபவங்களின் தரிசனங்களாக, ஆழமான அர்த்தம் பெறுகின்றன. சட்டநாதனின் கவிதைகளில் புறம் நின்று தன் அகத்தைக் காணும் ஒரு உத்தி காணப்படுகின்றது. தனது தனிமையையும் தன்னுள் செறிந்து கிடக்கும் வெறுமையையும் அவற்றின் தூல நிலைக்கு அப்பாற்பட்ட நிலையில் காணமுடிகின்றது’ என்று இத்தொகுதி பற்றிக் கவிஞர் சித்தாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்