13700 பிரேத பரிசோதனை: கவிதைகள்.

அஸாத் எம்.ஹனிபா. தெகிவளை: ஆ.ர்.ஆ.அஸாத், 48/5 ஏ, ஆசிரி மாவத்தை, களுபோவில, 1வது பதிப்பு, ஜுலை 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

xii, 119 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-54758-1-5.

வைத்திய கலாநிதி அஸாத் எம். ஹனிபா ஏற்கனவே ஆத்மாவின் புண், தம்பியார் ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டவர். மரண பரிசோதனை அறிக்கை என்ற தலைப்பினூடே ஒவ்வோர் ஆன்மாவினதும் எதிர்வினைகளையும் காட்சிப்படுத்தி இத்தொகுதியின் கவிதைகளை ஆசிரியர் வழங்குகிறார். இனவாதிகளால் மரணித்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் என்ற எதிர்பார்ப்போடு, வழக்காடும் சிலைகள், அகிலத்தின் அச்சாணி, ஹலால், அந்த இரு மணித்தியாலங்கள், நானும் நீயும், திறந்தவெளிச் சிறை, சிரேஷ்ட பிரஜை, அக்னி பூத்த அளுத்கம, கண்டுகொள்ளாதவள், விலாசம் தேடும் வியர்வை, சாமத்துப் பேய்கள், ஆண்மை, களிமண் வீடு, விடைகாணாத் தடைகள், பிரேத பரிசோதனைகள், இனவாதி, அங்கவீனச் சமூகம் என இன்னோரன்ன 58 கவிதைகளை இத்தொகுப்பின் வழியாக எமக்களித்துள்ளார்.

ஏனைய பதிவுகள்