13700 பிரேத பரிசோதனை: கவிதைகள்.

அஸாத் எம்.ஹனிபா. தெகிவளை: ஆ.ர்.ஆ.அஸாத், 48/5 ஏ, ஆசிரி மாவத்தை, களுபோவில, 1வது பதிப்பு, ஜுலை 2016. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி).

xii, 119 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-955-54758-1-5.

வைத்திய கலாநிதி அஸாத் எம். ஹனிபா ஏற்கனவே ஆத்மாவின் புண், தம்பியார் ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டவர். மரண பரிசோதனை அறிக்கை என்ற தலைப்பினூடே ஒவ்வோர் ஆன்மாவினதும் எதிர்வினைகளையும் காட்சிப்படுத்தி இத்தொகுதியின் கவிதைகளை ஆசிரியர் வழங்குகிறார். இனவாதிகளால் மரணித்தவர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையட்டும் என்ற எதிர்பார்ப்போடு, வழக்காடும் சிலைகள், அகிலத்தின் அச்சாணி, ஹலால், அந்த இரு மணித்தியாலங்கள், நானும் நீயும், திறந்தவெளிச் சிறை, சிரேஷ்ட பிரஜை, அக்னி பூத்த அளுத்கம, கண்டுகொள்ளாதவள், விலாசம் தேடும் வியர்வை, சாமத்துப் பேய்கள், ஆண்மை, களிமண் வீடு, விடைகாணாத் தடைகள், பிரேத பரிசோதனைகள், இனவாதி, அங்கவீனச் சமூகம் என இன்னோரன்ன 58 கவிதைகளை இத்தொகுப்பின் வழியாக எமக்களித்துள்ளார்.

ஏனைய பதிவுகள்

15525 காதல் பித்தனின் கிறுக்கல்.

பொத்துவில் அஜ்மல்கான். பொத்துவில் 19: தடாகம் கலை இலக்கிய வட்டம், பாடசாலை குறுக்கு வீதி, பசறிச்சேனை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2016. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xiv, 91

17795 வல்லினம்.

கோபிகை (இயற்பெயர்: திருமதி ஜயிலா பார்த்தீபன்). யாழ்ப்பாணம்: திருமதி ஜயிலா பார்த்தீபன், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2023. (வவுனியா: விஜய் அச்சுப் பதிப்பகம், 172 மில் வீதி). xvi, 136 பக்கம், விலை: ரூபா