கு.குகானந்தன்.(புனைபெயர்: புத்தூர் கு.குகன்). புத்தூர்: கு.குகானந்தன், ஓய்வுநிலை அதிபர், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (யாழ்ப்பாணம்: ஷாம்பவி பதிப்பகம், நீர்வேலி).
(6), 98 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 500., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-42119-1-9.
கவிஞர் புத்தூர் கு.குகன் அவ்வப்போது உள்ளூர் பத்திரிகைகளில் எழுதிப் பிரசுரித்த கவிதைகளின் தொகுப்பு. இலக்கியம், சமூகம், ஆய்வு ஆகிய மூன்று பிரிவுகளுக்குள் இக்கவிதைகள் வகைப்படுத்தித் தரப்பட்டுள்ளன. இக்கவிஞரின் ஆழ்மன அனுபவங்களும், அபிலாஷைகளும் படைப்புக்களில் துல்லியமாகத் தெரிகின்றன. கடவுள் பக்தி, பெரியோரை மதித்தல், நல்லனவற்றைப் பாராட்டுதல் முதலான குணங்களை இவரது சமூகக் கவிதைகளில் தரிசிக்கமுடிகின்றது. கவிஞர் திலகங்கள் என ஒரு பட்டியலைத் தரும் இக்கவிஞர் யாரையெல்லாம் கவிஞர்களாக மதித்திருக்கிறார் என்பதை எமக்கு அறியத்தருகின்றார். பாரதி, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார், கண்ணதாசன், மகாகவி, நவாலியூர் சோமசுந்தரப் புலவர் என இவரது பட்டியல் நீள்கின்றது. ஆய்வு என்ற பிரிவில் புத்தூருக்கு வளம் சேர்த்த பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், துறைசார் நிபுணர்கள், மருத்துவர்கள், புலமையாளர்கள், சமூக சேவகர்கள், இந்தியப் பட்டதாரிகள், இலங்கைப் பட்டதாரிகள் என்று தொடர்ந்து இறுதியில் புத்தூரின் பெருமைகூறி முடிக்கின்றார்.