13704 போதி மரங்களில் இரத்தப் பூக்கள்: ஈழப்போரின் குரலற்றவளின் சாட்சியங்கள்.

தமிழ் உதயா (இயற்பெயர்: திருமதி பசுபதி உதயகுமாரி விவேகானந்தராஜா). சென்னை 614713: நன்செய் பிரசுரம், அபுபேலஸ், திருவாரூர் சாலை, திருத்துறைப்பூண்டி, 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 5: சாய் தென்றல் பிரிண்டர்ஸ்).

103 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-930475-4-5.

இலங்கையில் மல்லாவியைப் பிறப்பிடமாகக் கொண்ட தமிழ் உதயா வவுனியா மாவட்ட பிரதிக் கல்விப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். போர்ச் சூழலையும் புலம்பெயர்தலின் வலிகளையும் எழுத்தில் வடிப்பவர். தினந்தோறும் தன்னைச் சுதாரித்தபடியே அன்றைய நாட்களை முகம்கொள்கின்ற கவிஞரின் தினசரி வாழ்வியல் முறைகளுக்குள்ளும் ஷெல், விமானத் தாக்குதல் பீரங்கி மற்றும் எறிகணைத் தாக்குதல், காணாமல் ஆக்கப்படுதல், அகதி வாழ்க்கை, வாழ்விழந்த வாழ்க்கைகள், சொந்த நாட்டுக்குள்ளேயே சிறையிருத்தல் இப்படி நிறையவே அனுபவித்தபடி வாழ்வதின் கடினத்தன்மை என்பன  இக்கவிதைகளில் தெளிவாகப் புலப்படுத்தப்படுகின்றது. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 062568).

ஏனைய பதிவுகள்