13706 மரணத்துக்கு முன் மரணியுங்கள்.

எம்.பி.எம்.நிஸ்வான். பாணந்துறை: ரஹ்மத் பதிப்பகம், 6A, யோனக மாவத்தை, வத்தல்பொல, கெசெல்வத்த, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (பாணந்துறை: V4U அச்சக இல்லம்,  இல. 25, கருணாரட்ண மாவத்தை, பள்ளிமுல்லை).

54 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×12 சமீ., ISBN: 978-955-38956-1-5.

அரை நுற்றாண்டுக்கும் மேலாக இலக்கியப் பணிகளில் ஈடுபட்டுவரும் கலாபூஷணம் எம்.பி.எம்.நிஸ்வான், ஓய்வுபெற்ற ஆசிரியராவார். ஓய்வின் பின்னர் காதி நீதவானாகக் கடமையாற்றியவர். ரமழான் மலர், மூன்றாம் தலாக், குற்றமும் தண்டனையும், மை வெளிச்சம் ஆகிய நான்கு நூல்களை வெளியிட்டவர். இவரது முதலாவது கவிதைத் தொகுதி இதுவாகும். மரணத்துக்கு முன் மரணியுங்கள், யார் வள்ளல்? கயமை நீக்கிய காரிகை, சகுனம், காதல் தியாக நிலை, கொடுத்தான் கொடுத்தான், பதவியாசை, நாய்க்குணம், சதகத்துல் ஜாரிய்யா, தீனின் வாசம், உத்தம புத்திரி, நிலைக்கண்ணாடி, வாழ வழி வகுப்பீரே, நிம்மதி, உண்மையறிவு, காயமே இது பொய், ஏச்சுப் பிழைக்கும் தொழில், நல்ல தீர்ப்பு, கல்வியும் செல்வமும், விசுவாசப் பிரமாணம் ஆகிய 20 கவிதைகளை இந்நூல் கொண்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Cellular & Atm Deposit Recommendations

Posts Exactly how Cellular Put Performs Pay Because of the Cellular phone Gambling enterprise! Benefits and drawbacks Away from Mobile Places Transfers In the event

10790 பொ.கைலாசபதியும் பொருளாராய்ச்சியும்.

ச.பரநிருபசிங்கம். யாழ்ப்பாணம்: கலைப்பீட வெளியீடு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1994. (யாழ்ப்பாணம்: பாரதி பதிப்பகம்). (2), 28 பக்கம், விலை: ரூபா 30., அளவு: 25×18.5 சமீ. பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளையின் பன்முகப்பட்ட

10859 புவியியல்: தரம் 11: புதிய பாடத்திட்டம் 2008.

கே.எம்.எம்.இக்பால். கிண்ணியா 04: கே.எம்.எம்.இக்பால், கட்டையாறு, 1வது பதிப்பு, ஆனி 2008. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F-L, 1-14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர). 272 பக்கம், விளக்கப்படங்கள், விலை: ரூபா 250., அளவு: