13708 மனிதம்(கவிதைத் தொகுதி).

இடம்பெயர்ந்தோருக்கான விசேட செயற்திட்டம். யாழ்ப்பாணம்: இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இல.1, மூன்றாம் குறுக்கு வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஹரிகணன் பிரின்டர்ஸ், 424, காங்கேசன்துறை வீதி).

iv, 52 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18×13 சமீ.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இடம்பெயர்ந்தோருக்கான விசேட செயற்திட்டத்தினால் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி கவிதைப் போட்டியொன்று ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அதில் பங்கேற்றுப் பரிசுபெற்றவர்களான அபிராமி நல்லதம்பி, வ.யோகானந்தசிவம், வ.கோவிந்தபிள்ளை, எமிலியான் இராசநாயகம், ஹர்சினி ஜெயபாலசிங்கம், ச.கமல்ராஜ், ந.ஸ்ரீநாகபூஷணி, புங்கையூர் துரைசுவேந்தி, ஜீ.நளின் பிரதீபன், அருள்மொழி ஆனந்தராசா, சூரியநிலா, அ.கௌசிகா, என்.பிரேமசீலன், ஆந்தை, சுரேஷியா சந்திரசேகரம், உதய பாரதிலிங்கம் தமிழ்மாறன், பூ நளாயினி, சி.அகிலன் ஆகியோரின் பரிசுக் கவிதைகளுடன், மனித உரிமை வளர்வதற்குச் செங்கோல் (சி.வினாசித்தம்பி), மனித உரிமைகள் புனிதமானவை (சோ.பத்மநாதன்),  மனித உரிமை ஆணையம் (தில்லைச் சிவன்) ஆகிய பிரபல கவிஞர்களின் கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. கவிதைகள் பெரும்பாலும் மனிதநேயத்தையும், சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும் பற்றிப் பேசுவதாயுள்ளன.

ஏனைய பதிவுகள்

15061 ஒளவையார் அருளிச்செய்த கொன்றைவேந்தன்.

ஒளவையார் (மூலம்), ஆறுமுக நாவலர் (உரையாசிரியர்). கொழும்பு 4: இந்துப் பண்பாட்டு நிதியம், இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம், 248, 1/1, காலி வீதி, 1வது பதிப்பு, 2018. (யாழ்ப்பாணம்: குரு பிரின்டேர்ஸ்,