தர்ஹாநகர் ஸூ.எம்.ஸா (இயற்பெயர்: A.H.ஆ.ஸூபியான்). தர்ஹாநகர்:
ஸூபியான் எம்.ஸாலிஹ், தாருஸ் ஸாலிம், குருந்துவத்தை வீதி, 1வது பதிப்பு,ஜனவரி 2006. (தர்ஹாநகர்: ஈசி சைன், 2, பிரதான வீதி).
34 பக்கம், விலை: ரூபா 100.00, அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 955-99421-0-7.
ஆசிரியர்கள் சமூகத்தில் மதிக்கப்படவேண்டியவர்கள், கண்ணியப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணக் கருவை அடிப்படையாகக்கொண்டு அவர்களுக்கு சமூகத்தில் இருக்கும் அந்தஸ்து, இழைக்கப்படும் அநீதிகள் என்பன விரிவாக இந்நூலில் கவியாக்கம் பெற்றுள்ளன. மாற்றி எழுதப்படவேண்டியதொரு சமூகக் கதாபாத்திரமாக ஆசிரிய சமூகம் இருப்பதனை வலுவுடன் பல கோணங்களிலும் சுட்டிக்காட்டி இந்நிலைக்குக் காரணம் என்னவென்று சமூகம் சிந்திப்பதற்கு இந்நூல் ஒரு ஊக்கியாக அமையும். இந்நூலாசிரியர் களு/சாஹிரா கல்லூரியின் பயிற்றப்பட்ட விஷேட கணித ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.