பாலமுனை பாறூக். பிரான்ஸ்: தமிழ் நெஞ்சம், 59, rue des Entrechats, 95800 Cergy, இணை வெளியீடு, பாலமுனை 03: பர்ஹாத் வெளியீட்டகம், 14A, பர்ஹானா மன்சில், 1வது பதிப்பு, ஜுலை 2017. (அச்சக விபரம் தரப்படவில்லை).
96 பக்கம், சித்திரங்கள், புகைப்படங்கள், விலை: ரூபா 320., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-99311-5-7.
பாலமுனை பாறூக் எழுதிய 75க்கும் மேற்பட்ட முகநூல் கவிதைகளின் தொகுப்பு இது. இக்கவிதைகளின் பாடுபொருளாக சமூகம், சமயம், அழகியல், அரசியல், கிராமியம் சார்ந்த விடயங்கள் அமைந்துள்ளன. சில கவிதைகள் கிண்டலும் நையாண்டியும் கொண்டவையாக உள்ளன. சில கவிதைகள் நாட்டார் பாடல்கள் போன்றமைந்தும் உள்ளன. வெண்பா, குறட்பா, சிந்து, குறும்பா, புதுக்கவிதை எனப் பல்வடிவங்களில் அமைந்த இக்கவிதைகள் சுவைக்கவும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62111).