சு.சிவராஜா. யாழ்ப்பாணம்: சு.சிவராஜா, நாவற்குழி, 1வது பதிப்பு, ஏப்ரல் 2018. (யாழ்ப்பாணம்: எவகிறீன் அச்சகம், இல. 693, காங்கேசன்துறை வீதி).
x, 58 பக்கம், புகைப்படங்கள்,விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.
நாவற்குழியூர் காதவாய்க்கால் விநாயகர் துதியுடன் தொடங்கும் இக்கவிதைத் தொகுதி, பராசக்தியின் பாமாலை, ஆற்றங்கரை வைபவம், அம்மா, ஐயா, மனைவி, மக்கள், என் ஆசான் சு.வே., நல்ல குருநாதனைத் தேடி, கல்வி, முதல் மரியாதை, எங்கள் தமிழ் மொழி, தமிழ்ப்பெண்ணே, தன்னைத்தான் தானுணரத் தனக்குள்ளே என்று தொடர்ந்து வரும் இவரது கவிதைகள் எப்போது கார்த்திகையோ?, காலத்தின் கோலம், வாழ்த்து-பல்லாண்டு எனத் தன் 42 கவிதைகளையும் ஒரு கோர்வையாக்கித் தந்துள்ளார். ‘இவரது கவிதைகள் பாரிஜாத மலராக இல்லாவிட்டாலும், வெறும் காகிதப் பூக்களல்ல. நறுவாசனை மிக்க மலர்களாக ஒளி வீசுவன. மென்மையான இதழ்களுமுண்டு. முட்களும் உண்டு. வாசகர் மனங்களில் இன்பம், துன்பம் ஆகிய இருவித உணர்வுகளையும் ஏற்படுத்தக்கூடியன. ஏதோவொரு விதமான ஊமை உள்ளத்தின் உடைவினாலெழுந்த முறுகலின் துயரம் கவிதைகளில் மேலோங்கி நிற்கின்றன’ என்று கலாநிதி செ.திருநாவுக்கரசு தனது கருத்துரையில் குறிப்பிடுகின்றார். (இந்நூல் கொக்குவில் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 15953).