த.சிதம்பரப்பிள்ளை. திருக்கோணமலை: கலாபூஷணம் த.சிதம்பரப்பிள்ளை, பள்ளிக்குடியிருப்பு, தோப்பூர், மூதூர், 1வது பதிப்பு, 2017. (திருக்கோணமலை: ஸ்ரீராம் பிரிண்டர்ஸ், 159A, கடல்முக வீதி).
(8), 9-71 பக்கம், புகைப்படங்கள், விலை: ரூபா 200., அளவு: 20×14.5 சமீ., ISBN: 978-955-4036-01-7.
இக்கவிதைத் தொகுதியின் படைப்பாளி தம்பிப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை மட்/வந்தாறுமூலை மத்திய மகாவித்தியாலயத்தில் (தற்போதைய கிழக்குப் பல்கலைக்கழக கட்டடத் தொகுதி) கல்வி பயின்றவர். நீண்டகாலம் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றியவர். பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் கவிதைகள், கட்டுரைகளை எழுதி வருபவர். சபதங்கள்(பாஞ்சாலி சபதம் நாட்டுக்கூத்து) நூலை எழுதியவர். கொம்புமுறி கொம்பு விளையாட்டுப் பெருவிழாவும் சிறுதெய்வ வழிபாடுகளும், பத்தினியம்மன் காவியம் ஆகிய நூல்களையும் எழுதியவர். விரியும் விம்பங்கள் இவரது அண்மைக்கால மரபுக் கவிதைத் தொகுதியாகும். இதில் இவரது 23 கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தேடுகிறோம் காணவில்லை (காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பானது), காலமானாலும் ரிஸானா நீ கல்வெட்டிலே பதிந்துகொண்டாய், குள்ளநரிக் கூட்டம், இன்னமும் சகதியே வாழ்க்கை, நடப்பது நல்லாட்சி தானா? தண்ணீரிலே தத்தளிக்கும் தமிழகம், ஊரைத் திரும்பிப் பார்க்கிறேன் எனப் பெரும்பாலும் சமகாலப் பிரச்சினைகளையே பல கவிதைகள் பேசுகின்றன.