13721 நகுலமலைக் குறவஞ்சி நாடகம்.

நா.விசுவநாத சாஸ்திரிகள். (மூலம்), ச.பத்மநாபன் (பதிப்பாசிரியர்). சிலாபம்: ஸ்ரீ முன்னேஸ்வரம் தேவஸ்தானம், முன்னேஸ்வரம், 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: மதி கலர்ஸ் பிரின்டேர்ஸ், நல்லூர்).

ix, 59 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14 சமீ., ISBN: 978-955-0877-14-0.

யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டையைச் சார்ந்த அராலியூர் பிரம்மஸ்ரீ நா.விசுவநாத சாஸ்திரிகள் ஆக்கிய இந்நாடக நூல் சுன்னாகம் ஸ்ரீ அ.குமாரசுவாமிப் புலவரவர்களால் பரிசோதிக்கப்பெற்று அராலியூர்ச் சிவன்கோயிற் பூசகர் ஸ்ரீலஸ்ரீ ச.கங்காதரக் குருக்களின் குமாரர் கணேசக் குருக்களால் பதிப்பிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தில் வாசஞ்செய்த பிரபுக்கள், பிராமணக் குருக்கள், நாட்டுக்கோட்டை நகரத்தார் முதலியோர்களையும் ஆங்காங்கே உள்ள ஊர்கள், தடாகங்கள் முதலியவைகளையும் இடையிடையே வர்ணித்தும், மடக்கு, யமகம், சிலேடை, தொனி முதலிய அலங்காரங்களை அமைத்தும் நகுலமலை மீதும் மாவைக் கந்தசுவாமி மீதுமாக செந்தமிழில் செய்த குறவஞ்சி நாடகம் இதுவாகும். 1895இல் வெளிவந்த இந்நூலின் மீள்பதிப்பு இதுவாகும். பிரம்மஸ்ரீ ச.பத்மநாதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருதத்துறை விரிவுரையாளராவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 54880).

ஏனைய பதிவுகள்

12177 – முருகன் பாடல்: பதினொன்றாம் பகுதி.

தொகுப்பாளர் குழு. கொழும்பு 11: தெட்சணத்தார் வேளாளர் மகமை பரிபாலன சொசைட்டி லிமிட்டெட், 98 ஜிந்துப்பிட்டி தெரு, 1வது பதிப்பு, ஆவணி 1995. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல்மாடி, 834, அண்ணா சாலை).

Usa No-deposit Casinos

Posts Stimulate Your own Greeting Extra Exactly what are No deposit Added bonus Rules? Best Needed Gambling enterprise Software In-may 2024 Can you Nevertheless Get

9341 அவாந்தி கதைகள்: சீன நாடோடிக் கதைகள்.

எச்.எம்.பி.முஹிதீன். கொழும்பு 13: அரசு வெளியீடு, 231 ஆதிருப்பள்ளித் தெரு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 1970. (கொழும்பு 13: ரெயின்போ பிரிண்டர்ஸ், 231 ஆதிருப்பள்ளித் தெரு). 66 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: