சுவாமி எல்.டெசி. நெடுந்தீவு: சுவாமி எல்.டெசி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1946. (யாழ்ப்பாணம்: அர்ச். சூசைமாமுனிவர் அச்சியந்திரசாலை).
(6), 123 பக்கம், விலை: ரூபா 1.00, அளவு: 18×12 சமீ.
வண. எல்.டெசி சுவாமியாரினால் ஐந்து அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ள இந்நாடகம் கிறிஸ்தவ இறையியல் கருத்துக்களை புகட்டும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கத்தோலிக்கர்களினால்; நம்பிக்கையுடன் பார்க்கப்படும் பாவசங்கீர்த்தனம் பற்றிய நாடகம் இது. பாவசங்கீர்த்தனம் கொடுக்கும் குருவானவரிடம் மக்கள் நம்பிக்கை வைக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துவது இந்நாடகத்தின் நோக்கமாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 01903).