13726 மழை: நிருத்திய நாடகம்.

சி.மௌனகுரு. மட்டக்களப்பு: விபுலம் வெளியீடு, இல.7, ஞானசூரியம்; சதுக்கம், 2வது பதிப்பு, 2008, 1வது பதிப்பு, 1985 (1987?). (மட்டக்களப்பு: சன் பிரின்டர்ஸ், இருதயபுரம் மேற்கு).

xxiv, 60 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 20.5×14.5 சமீ.

மௌனகுருவின் மூன்று நாடகங்கள் என்ற தலைப்பில் சி.மௌனகுருவின் நாடகங்கள் 1987இல் யாழ்ப்பாணம், நாடக அரங்கக் கல்லூரி வெளியீடாக ஒரு நூல் யாழ்ப்பாணம், கத்தோலிக்க அச்சகத்தில் அச்சிடப்பெற்று  வெளிவந்திருந்தது. அதே நூல் தற்போது  மீளவும் தலைப்பு மாற்றத்துடன் மட்டக்களப்பிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம், சுண்டிக்குளி மகளிர்கல்லூரி, இந்து மகளிர்கல்லூரி, ஆகிய கல்லூரிகளில் அக்கல்லூரி மாணவியரால் அரங்கேற்றப் பட்ட மழை (நிருத்திய நாடகம்), சரிபாதி (நிருத்திய நாடகம்),  நம்மைப் பிடித்த பிசாசுகள் (மோடி நாடகம்) ஆகிய மூன்று நாடகங்களின் நூலுருவே இதுவாகும். பெண்களின் சமூக விழிப்புணர்வு, தமிழர்களின் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் என்பவற்றை மையமாக வைத்து இவை தயாரிக்கப்பட்டுள்ளன. மழை நாடகம் முதலில் 21.10.1985 அன்று மேடையேற்றப்பட்டபோது ஈழமுரசு பத்திரிகை வாயிலாக வெளிவந்த ஏ.ரி.பொன்னுத்துரையின் விமர்சனம் (பக்கம் 45-47), வீரகேசரி பத்திரிகை வாயிலாக வெளிவந்த சு.இராசநாயகனின்; விமர்சனம் (பக்கம் 48-50), ஈழமுரசு பத்திரிகை வாயிலாக வெளிவந்த சங்கர் செல்வியின்; விமர்சனம் (பக்கம் 51-54), நம்மைப் பிடித்த பிசாசுகள் 09.03.87 அன்று மேடையேறிய வேளையில் முரசொலி பத்திரிகை வாயிலாக வெளிவந்த ஏ.ரி.பொன்னுத்துரையின் விமர்சனம் (பக்கம் 56-57), ஈழமுரசு பத்திரிகை வாயிலாக வெளிவந்த அம்மான் என்பவரின் விமர்சனம் (பக்கம் 58-59) என்பன பின்னிணைப்புகளாகத் தரப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்