13728 யாழூர் ராகம்: தொலைக்காட்சி நாடகம்.

கதைவாணன் (இயற்பெயர்: S.F.L.மொஹிதீன் ரஜா). மஹரகம: தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம், 1வது பதிப்பு, ஜனவரி 1999. (மஹரகம: இளைஞர் சேவை அச்சகம்).

100 பக்கம், விலை: ரூபா 80.00, அளவு: 21×14 சமீ., ISBN: 955-614-013-1.

யாழ்ப்பாணத்தில் பிறந்த இந்நூலாசிரியர் புத்தளத்தை வசிப்பிடமாகக் கொண்டவர். தனது 11ஆவது வயதில் எழுத்துலகில் காலடி பதித்த இவர் தேசிய தமிழ்த்தின விழாவில் தங்கப் பதக்கம் பெற்றவர். கொழும்புப் பல்கலைகக் கழகப் பட்டதாரியான இவர் புத்தளம், விருதோடை அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகின்றார். யாழூரின் சோகத்தையும் அறிவுத் தாகத்தையும் கலந்து, இந்து-முஸ்லீம் இன ஐக்கியத்தை அதனுள் புகுத்தி ஒரு தொலைக்காட்சி நாடகமாக்கித் தந்துள்ளார். நாவல், நாடகம், கவிதை, சிறுவர் இலக்கியம் என்று பல்பரிமாணங்களிலும் தன் எழுத்தாற்றலை வளர்த்துக்கொண்டவர் மொஹிடீன் ரஜா. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 021188).

ஏனைய பதிவுகள்

13620 முத்துக் கணையாழி-பாகம் 2.

உ.நிசார். மாவனல்லை: பானு பதிப்பகம், 70/3, புதிய கண்டி வீதி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (மாவனல்லை: பானு பதிப்பகம்). 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 100.00, அளவு: 21.5×14 சமீ.,