13733 அன்னை கதீஜாவும் அண்ணலார் குடும்பமும்.

ஜின்னாஹ் ஷரிபுத்தீன். சென்னை 600008: வெள்ளம்ஜி ஜமால் தாவூது பதிப்பகம், 13, தமிழ்ச் சாலை (ஹால்ஸ் ரோடு), எழும்பூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை: வி.என்.ஏ.பஷீர் அஹமது, பட்டேல் கிராப்பிக்ஸ்).

(27), 28-280 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 25×16.5 சமீ., ISBN: 978-955-54039-6-2.

மஹ்ஜபீன் தொடங்கி நாயனொடு வசனித்த நந்நபி வரை பத்துக் காப்பியங்களை நமக்கு வழங்கிய காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் பதினொராவது காப்பியமாக இந்நூல் வெளிவந்துள்ளது. ‘கதீஜா பிராட்டியார், பாத்திமா நாயகி, தீரர் அலி, நபி நேசர் ஹஸன்,  வீரர் ஹ{ஸைன், நிலைமகள் ஜைனப், அஹ்லுல் பைத் தொடரின் ஒளி நட்சத்திரம் ஜெய்னுல்அபிதீன் ஆகியோர் இக்காவியத்தில் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளவர்கள். இவர்களின் வரலாற்று நிகழ்வுகளை ஹதீஸ்கலையில் இருந்து தோண்டி எடுத்து, பிற வரலாற்று ஆசிரியர்களின் ஆய்வுகளில் கண்டவற்றுள் கொள்ளுவதைக் கொண்டு, தள்ளுவதைத் தள்ளி, சரித்திர சத்தியங்களைப் பொறுக்கி எடுத்து அவற்றைக் கவிதையாகக் கோவை செய்திருக்கும் கவிஞரின் திறன் உண்மையில் திறனாய்வாளர்களை எல்லாம் வியக்கச் செய்வதாகவே அமைந்திருக்கிறது’ (வாழ்த்துரையில், பேராசிரியர் கே.எம்.காதர் மொஹிதீன்)

ஏனைய பதிவுகள்