முகில்வாணன். மட்டக்களப்பு: எஸ்.நிமல்ராஜ், மட்டக்களப்பு மாவட்டத் தமிழ் எழுத்தாளர் பேரவை, 8/1, அதிகார் வீதி, 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2011. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).
xiii, 177 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 200., அளவு: 20.5×15 சமீ., ISBN: 978-955-53676-0-8.
கட்டியம், அன்புக்கரசி, செழியன், ஆசை அலை, இயல்பான ஈர்;ப்பு, மலர்ந்தும் மணமாகா மலர்கள், தேடல், நோக்கம் நோக்கியது, பள்ளம் நோக்கிய வெள்ளம், தென்றல் திரும்பியது, கற்பனை வானில், மௌனம் பேசியது, நிறைவு நாள், பூ ஒன்று புறப்பட்டது, ஆலய முன்றலில் அழகிய இளமை, கண்கள் கவிபாடியது, மொழியும் விழியும், வார்த்தைகள் சந்தித்தன, கீத மழையா காதல் மழையா?, மங்கையின் மயக்கம், திருவிழா முடிந்தது, புலர்ந்தது பூபாளம், இரண்டாம் சந்திப்பு, மனம் திறந்த பேச்சு, அறிவுக்கு மேல் அறிவு, தாயின் கணிப்பு, அவள் விழிகள், தொலைபேசித் தொடர்பு, ஆசிரியரானான், மௌன மனம் பேசியது, தாயும் சேயும், தாயும் நோயும், செழியனின் வீடு, அன்புக்கரசியின் வீடு, உறவு மலர்ந்தது, தந்தையுடன் மகள், வீட்டுக்குப் பயணம், இன்பத்துப்பால், இன்பத்தின் முகப்பில், ஒரு புதிய குடும்பம் உதயமாகிறது, முதலிரவு, புகழ், காதல் கனி இரசம், முதலை, சுனாமி புகுந்த வீடு, வைத்தியசாலையில், வேறு வழி, இயற்கையிடம் தூது, ஏழையின் இரக்கம், மின்னஞ்சல், செழியன் வீடு வந்தான், நண்பன், அன்பு நிருபம், தலைவன் வருகிறான், காதலன் குரல், இன்ப எண்ணங்கள் விரிந்தன, உயரப்பறக்கிறான், ஒத்திகை, நள்ளிரவு நாடகம், இந்தியாவில், கொழும்பு, தமிழகத்திலிருந்து, இன்னுமோர் இன்பத்துப்பால், ஆகிய 64 தலைப்புகளில் எழுதப்பட்ட காவிய வடிவில் அமைந்ததொரு காதல் கதை. மட்டக்களப்பு மாவட்டத்தில் பிறந்த ஈழத்து தமிழ் கவிஞர் முகில்வாணன் இராசையா, சில காலம் ஜெர்மனியில் வாழ்ந்தவர். இவர் தென்இந்தியாவில் இறையியல் டிப்ளோமா பட்டம் பெற்றவர். திருமறை போதகராகப் பணிபுரிகின்றார். நூலாசிரியரின் சகோதரர் அமெரிக்காவில் புனித தோமஸ் மோர் தேவாலயத்தில் பிரதம குருவாக இறை பணியாற்றும் பன்னூலாசிரியர் முனைவர் அந்தனி ஜான் அழகரசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.