கோயிலார் சிவசாமி. முல்லைத்தீவு: கோயிலார் சிவசாமி, புதுக்குடியிருப்பு, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (வவுனியா: சண்பீம் கிரியேஷன்ஸ், இல. 107, 1ஆவது தளம், பஸ் நிலையக் கட்டிடத் தொகுதி).
(4), 252 பக்கம், சித்திரங்கள், தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 29×21 சமீ.
கடவுள் வணக்கம், பாயிரம், பாண்டியன் அரசிருப்பு, கண்ணகை அம்மன் திருவவதாரம், கோவலனார் அவதாரம், கண்ணகை அம்மன் திருக்கரத்தமர்தல், தூரியோட்டம், கடலோட்டக் காதை, வெடியரசன் போர்க்கதை, நிலகேசரி புலம்பல், வீரநாரணன் வருகை, பாதாளலோகமும் மீகாமனும், வீரநாரணன் போர், விளங்குதேவன் போர், கண்ணகை அம்மன் தெய்வத் திருமணக்காதை, அரங்கேற்றுக்காதை, கோவலரை பொன்னுக்கு மறித்த காதை, கண்ணகை அம்மன் சிலம்புகூறல், உயிர்மீட்சிக் காதை, வழக்குரை காதை, மதுரை தகனம், கண்ணகை அம்மன் குளிர்ச்சி, காப்பு வெண்பா ஆகிய 21 இயல்களில் இக்காதை விரிகின்றது.