மருத மைந்தன் (இயற்பெயர்: சாஹூல் ஹமீத்). காத்தான்குடி: நவ இலக்கிய மன்றம், 1வது பதிப்பு, 1996. (சென்னை 600001: மில்லத் பிறின்டர்ஸ், 16, அப்புமேஸ்திரி தெரு).
95 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12 சமீ.
21.02.1936 இல் பிறந்த முஹம்மது சரிபு சாகுல் ஹமீத், மட்டக்களப்பு காத்தான்குடியைச் சேர்ந்த எழுத்தாளர். நிந்தவூர் அல் – அஸ்ரக் தேசிய பாடசாலை, காத்தான்குடி ஹிழ்றியா வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றவர். இவரது முதலாவது ஆக்கமான ‘பால்யவிவாகம்’ 1955 இல் தினகரன் பத்திரிகையில் பிரசுரமானது. தொடர்ந்து மருதமைந்தன், அபஷிரின் ஆகிய புனைபெயர்களில் 5 கட்டுரைகள், 100 இற்கும் மேற்பட்ட கவிதைகள், 1 சிறுகதை, சங்கமம்(காவியம்)-1996, அமுது(கவிதை)-1967 ஆகிய நூல்கள் உட்பட பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். இவர் கலாபூஷணம் விருது பெற்றவர். இஸ்லாமிய வீரக் காதல் காவியமாக ‘சங்கமம்’ அமைகின்றது. துருக்கி நாட்டு சுல்தான் அலப் அர்ஸலாவின் போர் நிகழ்ச்சி இக்காவியத்தின் களமாகின்றது. பாஹிம்கான், பிலோமினா, ஜேகப், மார்கிரட், போன்ற கற்பனைப் பாத்திரங்கள் இக்காவியத்துக்கு மெருகூட்டுகின்றன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 28154).