கலைக்கோட்டன் அ. இருதயநாதன். கொழும்பு 10: எஸ்.கொடகே சகோதரர்கள், 675 பி.டி.எஸ்.குலரத்ன மாவத்தை, மருதானை வீதி, 1வது பதிப்பு, 2017. (வெல்லம்பிட்டிய: சத்துர அச்சகம், 69, குமாரதாச பிளேஸ்).
(18), 19-95 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×14 சமீ., ISBN: 978-955-30-7938-1.
நூலாசிரியர் இருதயநாதன் ஒரு ஓய்வுபெற்ற பாடசாலை அதிபர். மட்டக்களப்பு, பாலமீன்மடுவில் 08.05.1949இல் பிறந்த இவர் நாட்டுக்கூத்து, மேடை நாடகம், தொலைக்காட்சி நாடகம் ஆகியவற்றிலும் குறுந்திரைப்படத் துறையிலும் ஈடுபாடு கொண்டவர். இச்சிறுகதைத் தொகுதியில் அமேசன் காட்டில் அழகன் பூசாரி, மறப்பதுமே உயிர்ப்பதுமே, சாதிகள் இல்லையடி பாப்பா, மனச்சிறை, நக்குண்டார், ராக்கிங், உப்பு, டொனேசன், கருவண்டு, உரோமாபுரிச் சிலுவை ஆகிய பத்துச் சிறுகதைகளை ஆசிரியர் வழங்கியுள்ளார்.