மலரன்னை (இயற்பெயர்: அற்புதராணி காசிலிங்கம்). மாங்குளம்: மலரன்னை வெளியீடு, மலராலயம், கொல்லர் புளியங்குளம், 1வது பதிப்பு, கார்த்திகை 2017. (யாழ்ப்பாணம்: குரு பிறின்டேர்ஸ், 453, ஆடியபாதம் வீதி, கல்வியங்காடு).
(4), 166 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-43209-4-9.
இது ஆசிரியரின் மூன்றாவது சிறுகதைத் தொகுதியாகும். சமூக நலனை அடிப்படையாகக் கொண்ட 25 சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. கடவுள் வாழும் இல்லம், வன்மம், புது வசந்தம், ஆறாம் அறிவு, பரிமாற்றம், இதற்காகத்தானா, அக நெகிழ்வு, கார்த்திகைப் பூக்கள், அசலும் நகலும், காலங்கள் மாறினாலும் உறையாத உணர்வுகள், அப்பா இல்லாத வீடு, அனலிடைப் புழு, ஈனப்பிழைப்பு, இரட்சிக்க வந்தவன், கேளுங்கள் தரப்படும், சாபத்தின் நிழல், புகலிடம், அவன் ஒரு கவிஞன், கிணற்றுத் தவளை, கோபுரம் இல்லாத கோயில், கேள்விக்குறி, வரம்பு, ஊன்றுகோல், உணர்வுகளின் சங்கமம், அலையெனப் புரளும் காலக்கோடு ஆகிய தலைப்புகளில் இவை எழுதப்பட்டுள்ளன. கச்சாயில் இரத்தினம் என்னும் பழம்பெரும் எழுத்தாளரின் புதல்வியான மலரன்னை ஈழத்துப் போர் இலக்கியத்துக்கு ‘போர் உலா’ என்ற நூலைத் தந்த மலரவன் என்ற ஈழவிடுதலைப் போராளியின் அன்னையாவார். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 62806).