ஸ்ரீரஞ்சனி விஜேந்திரா. மட்டக்களப்பு: மகுடம் பதிப்பகம், 90, பார் வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 126/1, திருமலை வீதி).
122 பக்கம், விலை: ரூபா 400., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-4041-12-7.
கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் நூலாசிரியர், இலங்கையில் தெல்லிப்பழையைச் சேர்ந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விவசாய விஞ்ஞானப் பட்டதாரியான இவர் கனடாவில் தமிழாசிரியராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றுகிறார். இவரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது. முதலாவது கதைத்தொகுதி ‘நான் நிழலானால்’ என்ற தலைப்பில் 2010இல் வெளிவந்திருந்தது. ‘உதிர்தலில்லை இனி’ என்ற இவரது இரண்டாவது கதைத் தொகுதியில் மனக்கோலம், கனவுகள் கற்பனைகள், யதார்த்தம் புரிந்தபோது, வெளியீட்டு விழா, தடம்மாறும் தாற்பரியம், உதிர்தலில்லை இனி, உள்ளங்கால் புல் அழுகை, மனசே மனசே, நெறிமுறைப் பிறழ்வா?, பேசலின்றிக் கிளியொன்று, இலக்கணங்கள் மாறலாம், எதுவரை? இப்போதில்லை, பச்சை மிளகாய், நிகண்டுகள் பிழைபடவே, சில்வண்டு ஆகிய 16 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. 18ஆவது மகுடம் பதிப்பக வெளியீடாக இந்நூல் வெளிவந்துள்ளது.