13749 காட்டிலிருந்து வந்தவன்.

சுதாராஜ். தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001:  1வது பதிப்பு, டிசம்பர் 2017. (சென்னை 600005: மணி ஓப்செட்).

(10), 11-127 பக்கம், விலை: இந்திய ரூபா 140., அளவு: 21.5×14 சமீ., ISBN: 978-93-86820-21-1.

சமகால ஈழத்துத் தமிழ்ச் சிறுகதை உலகின் முக்கியமான ஆளுமைகளுள் சுதாராஜும் ஒருவர். சுதாராஜின் கதைகள் வெவ்வேறு வகையில் மனித ஆளுமையின் உடைவுகளையும் அதன் உயிர்ப்பையும் பேசுகின்றன. மனித நேயமும், மனிதத்தின் உயிர்ப்புமே அவரது அரசியலாகவும் அழகியலாகவும் படைப்புகளினூடாக வெளிப்படுகின்றன. இந்நூலில் சுதாராஜ் எழுதிய, தொலைந்து போனது, பிறழ்வு, காட்டிலிருந்து வந்தவன், யுத்தங்கள் செய்வது, ஒரு துவக்கின் கதை, உருளைக்கிழங்குகளும் வெங்காயங்களும் வெட்டப்படாமலே கிடந்தன, எந்த முகம்? வழி தவறிய ஆடு, உள்ளுறை வெப்பம், இரவு வெளிச்சம் ஆகிய பத்துச் சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. நூலின் பின்னட்டையில் ISBN: 978-93-86820-20-4 என அச்சிடப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Slot Machine Online Borea Treasure

Content Slot king of the jungle | Conj Poți Câștiga De Jocurile Care Jackpot Progresiv? Tipuri De Jocuri Ş Păcănele Clasice De Este Patronul Vlad

10324 செந்தமிழ் விளக்கம் சுடர் 6.

நவாலியூர் சோ.இளமுருகனார். யாழ்ப்பாணம்: சோ.இளமுருகனார், நவாலி, 1வது பதிப்பு, ஆண்டு விபரம் தரப்படவில்லை. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்). 18 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×12.5 சமீ. இலங்கைப் பாடசாலைகளில் பயன்படுத்தப்பட்ட தமிழ்மலர்