13753 சுவடுகள்.

கீத்தா பரமானந்தம். ஜேர்மனி: திருமதி கீதராணி பரமானந்தம், Schubert Str-15, 47623, Kevelaer, 1வது பதிப்பு, நவம்பர் 2017. (யாழ்ப்பாணம்: குரு பிறின்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி).

xvi, 101 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20×14.5 சமீ.

யாழ்ப்பாணம், திருநெல்வேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட கீதா பரமானந்தம், யாழ். இந்து மகளிர் கல்லூரியின் பழைய மாணவியாவார். முகநூலில் நிலாமுற்றத்தில் தனது படைப்பாக்கங்களைப் பகிர்ந்துகொண்டு, தனக்கெனவொரு வாசகர் கூட்டத்தைக் கொண்டுள்ளவர். ஜேர்மனியிலிருந்து வெளிவரும் மண் சஞ்சிகை, லண்டனிலிருந்து ஒலிபரப்பப்படும் சன்ரைஸ் லண்டன் தமிழ் வானொலி ஆகியவற்றிலும் நீண்டகாலம் தன் படைப்பாக்கங்களை வழங்கிவந்தவர். அவரது தேர்ந்த சிறுகதைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. இந்நூலில்; கருகிய மொட்டு, யார் தவறு, நிஜங்களின் தரிசனம், காயங்கள் மாறும், தனக்கு வந்தால் தான் தெரியும், மனநிறைவு, மணற் கடிகாரம், சித்தி, புளியமரத்தடியும் பெரிய ஐயாவும், முக்கோணம், முற்பகல் செய்யின், போராட்டம், விளையாட்டின் வினை, முதற் காதல், இரவுச் சூரியன், விதியின் சதி, அக்கரைகள் பச்சையில்லை, கலைந்த கனவுகள், கடவுள் இல்லம், தொலைந்த கவிதை, ஒட்டுண்ணி ஆகிய 21 தலைப்புகளில் எழுதப்பட்ட கதைகள் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்

Slots Vegas Harbors Enchanted Unicorn

Posts Ready yourself to be Enchanted Added bonus Symbols The fresh Fairytales of Crystal Tree Enchanted Prince Demonstration Play Perhaps you have realized, the newest