13755 தடம் மாறும் பாதைகள்.

சி.இராஜினிதேவி. அல்வாய்: ஜீவநதி வெளியீடு, கலை அகம், அல்வாய் வடமேற்கு, 1வது பதிப்பு, ஆனி 2017. (நெல்லியடி: பரணீ அச்சகம்).

viii, 80 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-4676-58-9.

தடம் மாறும் பாதைகள் தொகுப்பின் கதைகள் அனைத்திலும் காணக்கிடைக்கின்ற பொதுப் பண்புகள், படைப்பாளியின் சமூக அக்கறை, மனித நேயம், சமூகச் சிறுமைகளுக்கு எதிரான அவரது கோபம் ஆகியன என்று கூறலாம். அதே பொழுதில் கண்டிக்கப்படவேண்டியதும் இழிவென ஒதுக்கப்படவேண்டியதுமான விடயங்களைச் சொல்லவரும் இடங்களில் அவரது தொனி எச்சரிக்கையுடன் பௌவியமாகவே வெளிப்படுத்தப்படுகின்றது. இத்தொகுதியில் இராஜினிதேவி எழுதிய காகிதப்பூக்கள், எதிர்பார்த்தவையும் எதிர்பாராதவையும், பாரிஜாதம், விடியலைத் தேடும் வெண்புறா, பசி, பெற்ற மனம் பித்து, சலனம், மொட்டுக்களும் முட்களும், விடிவு, தடம் மாறும் பாதைகள், ஊசலாடும் உறவுகள், உயர்ந்த உள்ளம் ஆகிய பன்னிரு சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் சுன்னாகம்; பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம் 24895). 

ஏனைய பதிவுகள்

12109 – திருத்தம்பலகாமம் ஆதிகோணநாயகர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாச் சிறப்பு மலர்

1999. வே. வரதசுந்தரம் (மலர் ஆசிரியர்). தம்பலகாமம்: அறங்காவலர் அவை, ஆதிகோணநாயகர் கோயில் தேவஸ்தானம், 1வது பதிப்பு, ஜுன் 1999. (கொழும்பு 13: யுனி ஆர்ட்ஸ், 48B, புளுமெண்டால் வீதி). 68 பக்கம், புகைப்படங்கள்,