மு.தயாளன் (இயற்பெயர்: மு.நற்குணதயாளன்). மட்டக்களப்பு: மகுடம் வெளியீட்டகம், 90, பார் வீதி, 1வது பதிப்பு, ஜுன் 2018. (மட்டக்களப்பு: வணசிங்க அச்சகம், 496 A, திருமலை வீதி).
140 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 17.5×12.5 சமீ., ISBN: 978-955-4041-11-0.
மகுடம் பதிப்பகத்தின் 17ஆவது வெளியீடாக இச்சிறுகதைத் தொகுதி வெளிவந்துள்ளது. மு.தயாளன் லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்கின்றார். இந்நூலில் உள்ள 12 சிறுகதைகளும் சமூக அவலங்களையும் சமகாலப் பிரச்சினைகளையும் கதைக்கருவாகக் கொண்டவை. பதிப்புரை, புளியமரத்தின் கதைகள், நானும் என் எழுத்தும் ஆகிய உரைகளைத் தொடர்ந்து புளியமரம், பனி விழும் ஒரு நாள், மாறிலிகள், கனவுகளைத் தொலைத்தவள், வயிற்றிற் சுமந்தவள், நரபலி, சத்தியாக்கிரகம், நந்தனும் சின்னானும், கலாசாரம், உடைந்த கண்ணாடி, பச்சோந்தி, சூடிக்கொடுத்தவள் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச் சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 63760).